Wednesday, September 29, 2010

About BCCI-Di na malar

மும்பை:இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கு சஷான்க் மனோகர் மற்றும் சீனிவாசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக பி.சி.சி.ஐ., விளங்குகிறது. இதன் 81 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், இன்று மும்பையில் துவங்குகிறது. இதில், தலைவர், செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், தற்போதைய தலைவராக உள்ள சஷான்க் மனோகர், செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மீண்டும் இதே பதவிக்காக தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வில்லை. இதனால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரும் தங்களது பதவியில் இன்னும் ஒராண்டு காலம் தொடர உள்ளனர்.

எதிர்ப்பின்றி தேர்வு:இவர்களைப் போல, பொருளாளர் பொறுப்பில் உள்ள எம்.பி.பாண்டோவ், இணைச் செயலாளராக உள்ள சஞ்சய் ஜக்தலே ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சீனிவாசனுக்கு வாய்ப்பு: சுழற்சி முறையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் முறையை, முன்னாள் பி.சி.சி.ஐ., தலைவர் சரத்பவார் கொண்டு வந்தார். இதன்படி தற்போதைய தலைவராக சஷான்க் மனோகர் உள்ளார். மத்திய மண்டலத்தை சேர்ந்த சஷான்க் மனோகரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையடுத்து சுழற்சி முறையில், தலைவர் பதவிக்கு தென் மண்டலத்தை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதனால் தற்போது பி.சி.சி.ஐ., செயலாளராக உள்ள தமிழகத்தின் சீனிவாசன், அடுத்த ஆண்டு தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார்.

மோடி நீக்கம்:பி.சி.சி.ஐ., துணைத்தலைவர்களாக இருந்த, முன்னாள் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி, தற்போதைய ஐ.பி.எல்., தலைவர் சிரயு அமீன் ஆகியோர் நீக்கப்பட உள்ளனர். இவர்களுக்குப் பதில், முன்னாள் செயலாளர் நிரஞ்சன் ஷா, ராஜிவ் சுக்லா ஆகியோர் தேர்வு பெற உள்ளனர்.

ஸ்ரீகாந்த் நீடிப்பு?:இது தவிர, ஐ.பி.எல்., ஆட்சிக் குழு, பி.சி.சி.ஐ., செயற்குழு, இந்திய சீனியர் மற்றும் ஜூனியர் தேர்வுக் குழு உள்ளிட்ட அமைப்புகள் இன்று தேர்வு செய்யப்பட உள்ளன. தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருக்கும் ஸ்ரீகாந்த், தொடர்ந்து அடுத்த ஆண்டு வரை பதவியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/