அன்பர்களே! நான் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான மற்றும் செய்ய வேண்டிய நேர அளவை குறிப்பிடுள்ளேன் . மேலும் இவை அனைத்தையும் எல்லாராலும் நேரம் இன்மையால் செய்ய இயலாது, அதனால் ஆண்கள் மற்றும் பெண்கள் செய்ய வேண்டிய சில யோகாசனத்தை பிரித்து தொகுத்து தருகிறேன்.
தினமும் காலையில் உட்கார்ந்து, மல்லாக்க, குப்புறப்படுத்து, நின்று செய்யக்கூடிய சில ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம் செய்துவந்தால் உடல்நிலை நன்கு இருக்கும். நோய்கள் ஏற்படாது. ஆசனங்களை தினமும் செய்ய வேண்டும்.
"ஆசனம் பாதி, அசனம் (உணவு) பாதி' என்பர். ஆசனங்கள் செய்தால் மட்டும் போதாது. இயற்கை உணவு முறை பின்பற்ற வேண்டும். பச்சைக்காய்கறிகள், தேங்காய், அவல், பழவகைகள், பழச்சாறுகள் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இயற்கை உணவு உண்டு ஆசனங்களை செய்துவந்தால் நோய்நொடியின்றி என்றும் இளமையுடன் வாழலாம். மனவளர்ச்சியற்றோர், தொழு நோயாளிகள் கூட ஆசனங்கள், இயற்கை வைத்திய முறையில் குணமடைந்துள்ளனர்.
கொஞ்சம் பொறுமை காட்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
பயிற்சிகளின் கால அளவு நேரம் ;
பிரார்த்தனை- 1 நிமிடம்,
தயார் நிலை பயிற்சிகள்:
"உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள், முத்தம் கொடுத்தல், கண், கழுத்துப் பயிற்சிகள்" 3 நிமிடங்கள்
ஆசனங்கள்:
சூரிய நமஸ்காரம் - 4 நிமிடங்கள்
நின்று செய்யும் ஆசனங்கள்:
தாளாசனம் - 1/2 நிமிடம்
உட்கட்டாசனம் - 1 நிமிடம்
அர்த்த சக்ராசனம் - 1 நிமிடம்
பாத ஹஸ்தாசனம் - 1 நிமிடம்
அர்த்தகடி சக்ராசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்
திரிகோணாசனம் - 1 நிமிடம்
"பரி வருத்த திரிகோணாசனம் (இரு பக்கமும்)" - நிமிடம்
ஏக பாதாசனம் (இரு பக்கமும்) - 1நிமிடம்
அர்த்த சிராசனம் - 1 நிமிடம்
சக்ராசனம் - 1நிமிடம்
பர்வத ஆசனம் - 1 நிமிடம்
உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள்:
வஜ்ராசனம் - 1 நிமிடம்
உஷ்த்ராசனம் - 1/2 நிமிடம்
வஜ்ர முத்ரா - 1 நிமிடம்
சுப்த வஜ்ராசனம் - 1/2 நிமிடம்
பஸ்சி மோத்தாசனம் - 1/2 நிமிடம்
சித்த பத்மாசனம் - 1 நிமிடம்
பர்வதாசனம் (மலை)- 1 நிமிடம்
யோக முத்ரா - 1 நிமிடம்
கோமுகாசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்
வக்ராசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்
அர்த்த மத்ஸ்யெந்திர ஆசனம் - 1 நிமிடம்
ஆகர்ண தனுராசனம் - 1 நிமிடம்
அமர்ந்த ஏகபாத ஆசனம் - 1 நிமிடம்
குதபாத ஆசனம் - 1 நிமிடம்
படுத்து செய்யும் ஆசனங்கள்:
புஜங்காசனம் - 1 நிமிடம்
சலபாசனம் - 1 நிமிடம்
தனுராசனம் - 1 நிமிடம்
உத்தன பாதாசனம் - 1/2 நிமிடம்
சர்வாங்கசனம் - 3 நிமிடங்கள்
மச்சாசனம் - 1 நிமிடம்
பவன முக்தாசனம் - 1 நிமிடம்
விபரீத கரணி - 1/2 நிமிடம்
ஹலாசனம் - 1 நிமிடம்
பத்ம சிங்காசனம் -1 நிமிடம்
கூர்மாசனம் - 1 நிமிடம்
அர்த்த சர்வாங்காசனம் - 1 நிமிடம்
யோக நித்ராசனம் - 1 நிமிடம்
பத்ம சயனாசம் - 1 நிமிடம்
புஜபாத பீடாசனம்- 1 நிமிடம்
உடல் தளர்வு பயிற்சி:
சாந்தியாசனம் - 10 நிமிடங்கள்
பிராணயாமம்;
கபாலபதி - 1 நிமிடம்
சுகப் பிராணயாமம் ஒவ்வொரு பக்கமும் ஒன்பது சுற்றுகள்- 3 நிமிடங்கள்
நாடி சுத்தி ஒன்பது சுற்றுகள் - 3 நிமிடங்கள்
தியானம் - 10 நிமிடங்கள்
பிரார்த்தனை - 1 நிமிடம்.
சற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...
பொது நலனில் அக்கறை கொண்ட உங்கள் கடலூர் அரங்கநாதன்...