Monday, December 27, 2010

மாநில அளவிலான சதுரங்க போட்டி

சிதம்பரம்:மாநில அளவிலான சதுரங்க போட்டியில் விளையாட சிதம்பரம் காமராஜ் பள்ளி மாணவர் விக்னேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடலூர் கல்வி மாவட்ட மாணவ, மாணவிகளுக்கான 2010-2011 குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின மண்டல அளவிலான விளையாட்டு போட்டி விழுப்புரத்தில் நடத்தப்பட்டது. இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்க போட்டியில் சிதம்பரம் காமராஜ் பள்ளி மாணவர் விக்னேஷ் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். இந்த மாணவரை பள்ளி தாளாளர் கஸ்தூரி, முதல்வர் சக்தி பாராட்டினர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/