கோவை: கோவையில், ஆதரவற்ற குழந்தைகளை மீட்டு, மறுவாழ்வு அளிப்பதற்கு ஆட்டோ,
டாக்சி டிரைவர்கள், ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள், பிளாட்பார
வியாபாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களை கொண்ட, 50க்கும் மேற்பட்ட, சமூக
தன்னார்வ பாதுகாப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இக்குழுவினர், 74
குழந்தைகளை மீட்டுள்ளனர். அந்த சிறுவன் பெயர் சுரேஷ் பாபு. 20 ஆண்டுகளுக்கு
முன், கோவையின் ஏதோ ஒரு தெருவில் இருந்து, மீட்டு வரப்பட்ட அந்த
சிறுவனுக்கு, கோவை டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில், அடைக்கலம் கிடைத்தது.
அந்த சிறுவன் இன்று வளர்ந்து, அதே அன்பு இல்லத்தில் பணியாற்றுகிறார்.
தன்னைப் போன்ற, ஆதரவற்ற சிறுவர்களை மீட்டு, மறுவாழ்வு அளிப்பது தான், அவரது குறிக்கோள். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு பகுதிகளில், உற்றார் உறவினர்களை இழந்து, நிர்கதியாக நிற்கும் ஆதரவற்ற குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறார். இதனால், ரயில்வே தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், பிளாட்பார கடை வியாபாரிகள் என பலருக்கும் அறிமுகம் ஆனார். இவர்களை இணைத்து, "சமூக தன்னார்வலர் குழு' என்ற, மீட்புக்குழுவை அமைத்துள்ளார், சுரேஷ்பாபு.
இவரது முயற்சியால், இன்று ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொது இடங்களில் 50 சமூக தன்னார்வ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 74.
http://www.dinamalar.com/News_detail.asp?Id=374177

No comments:
Post a Comment