1981 கல்கி வார இதழ் என் சீனுவாசன். கண் கண்ட தெய்வம்.
இராணுவத் துறையில் சிவில் அதிகாரியாகப்
பணி செய்து வந்த எனக்குத் திடீரென்னு ஒர் அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடைய கண்களின்
பார்வை துரிதமாகச் சீரழிந்து அடியோடு பார்வை போய்விட்டது. சென்னையில் உள்ள பெரிய கண்
சிகிச்சை நிபுணர்கள் கைவிரித்து விட்டார்கள். ஏழு வருடங்கள் ஓடின. இரு கண்களும் இல்லாத
குருடனாய் பெரிய குடும்ப பாரத்துடன் தத்தளித்து கொண்டிருந்தேன். கையிலிருந்த பணமும்
நகை நட்டுக்களும் கரைந்தன. வேலையும் போய்விட்டது. சொல்லொணாத் துயர்களை அனுபவித்துக்கொண்டு
பெரியவாளையே தியானம் செய்து கொண்டிருந்தேன் தருணத்தில் அய்தராபத்திலிருந்து நண்பர்
திடீரென்னு வந்து மறுநாள் கா’ஞ்சிபுரத்துக்குச் அழைத்துச் சென்றார்.. பெரியவர் அவரது
கனவில் என்னை உடனே காஞ்சிபுரத்துக்கு அழைத்து வரும்படி ஆக்ஞாபித்ததைத் தெரிவித்தார்.
மறுநாள் உடனே காஞ்சிபுரத்துக்குச் செனறோம்.
ஶ்ரீபெரியவா சர்வ தீர்த்தத்திற்கு
அருகில் பர்ணசாலை அமைத்து அதில் அமர்ந்திருந்தார். சமிக்ணை முலமாக அருகில் வரும்படி
உத்தரவிட்டார். எனது நண்பர் என்னைக் கைப்பிடித்து கொண்டு பெரியவாளின் திவ்விய சமுகத்துக்கு
அழைத்துச் சென்றார். என் மனைவியிடம் நீங்கள்
யாவரும் சென்னைக்குத் திரும்புங்கள். சீனுவாசனின் இரண்டு கண்களும் ஆபரேசன் ஆகி நன்றாய்க்
கண் தெரிந்தவுடன் வருவான் என்று அனுக்கிரகித்து நண்பர் முர்த்தியை உடனே அய்தராபத்திற்கு
திரும்புபடி அனுக்ரகப் பிரசாத்துடன் உத்தரவிட்டார்.
காஞ்சிபுரத்திலேயெ தொழில் நடத்தும்
டாக்டர் வெங்குடி பாலசுப்பிரமண்யத்திடம் அன்றே அழைத்துச் செல்லப்பட்டேன். அவர் பெரியவாளிடத்தில்
தாம் கொண்ட பக்தியின் பலத்தால் சென்னையில் பிரபல நிபுணர்களால் கைவிடப்பட்ட எனக்குக்
கண் ஆபரேசன் செய்ய ஆயத்தங்களை செய்து விட்டார். முதலில் வலக் கண்ணைத் தைரியமாக ஆபரேசன்
செய்தார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் செய்தார். 3ம் நாள் கட்டை அவிழ:த்து பட்டை போட்டிருக்கும்போது
மருத்துவமனை வாசலில் ;பெரியவா வந்து நின்று கொண்டு விசாரிக்க ஆச்சரியம் அடைந்த டாக்டர்
மெதுவாகக் கைப்பிடித்து பெரியவாளின் அருகில் அழைத்துச் சென்று பட்டையை விலக்கி பார்க்கச்
சொல்ல ஏழு வருஷங்களுக்கு பின் முதன் முதரலக
நான் கண்ட காட்சி பெரியவாளின் திருவுருதான்!. என் மகிழ்ச்சியை எப்படி விவரிப்பேன்.
அடுத்த 15 நாட்களில் மறு கண்ணையும்
ஆபரேசன் செய்ய டாக்டருக்கு உத்தரவு பிறப்பித்து விட்டார் பெரியவா. டாக்டர் அவ்வாறே
செய்ய என்ன ஆச்சரியம். இரு கண்களிலும் புர்ண பிரகாசம் ஏற்பட்டு இழந்த பார்வையினை மீண்டும்
பெற்றேன். மேஜர் ஆபரேசன் இருந்தும் ரணம்
3 அல்லது 4 நாட்கள் தான். எனக்கு சொஸதமாகிவிட்டது.
பெரியவாளின் கருணையே கருணை.
No comments:
Post a Comment