Saturday, May 21, 2011

விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரி-Dina malar 19 05 11

விழுப்புரம் : விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் விளையாட்டு வீரர்களுக்கான தேர்வுநடக்கிறது. விக்கிரவாண்டி சூர்யா கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கவுதமசிகாமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் 2011-12 ம் ஆண்டிற்கான விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு கல்லூரி வளாகத்தில் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் கைப்பந்து, கூடைபந்து,டென்னிஸ், இறகு பந்து, பெண்கள் பிரிவில் டென்னிஸ், இறகுபந்து ஆகிய விளையாட்டுகளுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு கல்வி செலவுகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு கல்வி குழும இயக்குனர் டாக்டர் சாந்தியை நேரிலும், தீதீதீ.ண்தணூதூச்ஞ்ணூணிதணீ.ஞுஞீத.டிண என்ற இணைய தள முகவரியிலும், மொபைல் எண்கள் 98437 01701, 97897 26655, 98949 79811 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு டாக்டர் கவுதமசிகாமணி தெரிவித்துள்ளார்.

கடலூர் ஆர்மி அமெச்சூர் ஸ்கேட்டிங் அகாடமி-Dina malar.19 05 11

கடலூர் : கடலூர் ஆர்மி அமெச்சூர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பாக சர்வதேச ஸ்கேட்டிங் வீரரை கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் ஆர்மி அமெச்சூர் ஸ்கேட்டில் அகாடமி சார்பில் கடந்த 30 நாட்களாக சிறப்பு ஸ்கேட்டிங் கோடைக்கால பயிற்சி முகாம் நடந்து வருகிறது. பயிற்சியின் இறுதியாக முகாமில் பங்கேற்ற சிறுவர்களுக்கு சர்வதேச ஸ்கேட்டிங் வீரர் மற்றும் பயிற்சியாளரான ரொமென் சிறப்பு பயிற்சி அளித்தார். இப்பயிற்சியை அகாடமி சேர்மன் ராமலிங்கம் துவக்கி வைத்தார். பயிற்சியாளர் பிஸ்வாஸ், அகாடமி செயலாளர் சந்திரமோகன்பால்ராஜ், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், சட்ட ஆலோசகர் கதிர்வேல், அகாடமி துணைதலைவர் கேப்டன் ரங்கநாதன், இணை செயலாளர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, துரைராஜ், ராமானுஜம் ஆகியோர் பங்கேற்றனர்.

Friday, May 6, 2011

ஷிட்டோ - ரியோ இந்தியன் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள்-Dina malar 06 05 11


கிள்ளை : சிதம்பரம் ஷிட்டோ - ரியோ இந்தியன் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் பிச்சாவரம் வரை தொடர் ஓட்டம் நடத்தினர். சிதம்பரம் ஷிட்டோ - ரியோ இந்தியன் கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவர்கள் அவ்வப்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் ஓட்டம் நடத்தி வருகின்றனர். சிதம்பரத்தில் துவங்கிய நடை பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஓட்டச் சுடரை எழுத்தாளர் பாலசுப்ரமணியன் ஏற்றினார். அணி வணிகர் பழனி துவக்கி வைத்தார். கராத்தே நிபுணர் சென்னை ரென்ஷி குமார், சென்சாய்கள் இளங்கோவன், விஸ்வநாதன், பாஸ்கர், சினிமா நடிகர் கராத்தே ராஜன், சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ரவி, முன்னாள் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் தொடர் ஓட்ட ஜோதி ஏந்தி அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காராத்தே பயிற்சி மாணவர்கள் சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையம் வரை வரை 15 கி.மீ., தொடர் ஓட்டமாக சென்றனர்.

match fixed? yahoo.com

Sunday, May 1, 2011

கடலூர் : இகாஸ் கால்பந்து மாணவிகள் -Dina malar.1 05 11

கடலூர் : இகாஸ் கால்பந்து மாணவிகள் 40 பேருக்கு டான்ஃபேக் கம்பெனி சார்பில் இலவச விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டது. கடலூரில் இகாஸ் கால்பந்து அமைப்பு, சுனாமியால் பாதிக்கப்பட்டு, அரசு காப்பகத்தில் தங்கி படித்து வரும் மாணவிகளை தேர்வு செய்து கால்பந்து பயிற்சி அளித்து வருகிறது. இக்குழுவில் உள்ள மாணவிகள் வெளி மாநிலம், மற்றும் வெளிநாடுக்குச் சென்று பெண்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்று பல பரிசுகளை பெற்று வருகின்றனர். தற்போது இக்குழுவில் உள்ள மாணவிகள் மகாலட்சுமி, கண்ணாத்தா, பத்மாவதி ஆகியோர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்துவரும் தேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் புதுச்சேரி அணி சார்பில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தற்போது இக்குழுவினருடன் இகாஸ் கோடை கால கால்பந்து பயிற்சி முகாமில், கடலூர் சிப்காட் டான்ஃபேக் கம்பெனி சார்பில் கால்பந்தாட்ட மாணவிகள் 40 பேருக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் டான்ஃபேக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சம்பத்குமார் மாணவிகளுக்கு சீருடை வழங்கினார். இகாஸ் செயலாளர் மாரியப்பன், பயிற்சியாளர் செங்குட்டுவன், ராஜ்மோகன், துரைசாமி, சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இகாஸ் பொருளாளர் திருமலை நன்றி கூறினார்.

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/