Sunday, May 1, 2011

கடலூர் : இகாஸ் கால்பந்து மாணவிகள் -Dina malar.1 05 11

கடலூர் : இகாஸ் கால்பந்து மாணவிகள் 40 பேருக்கு டான்ஃபேக் கம்பெனி சார்பில் இலவச விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டது. கடலூரில் இகாஸ் கால்பந்து அமைப்பு, சுனாமியால் பாதிக்கப்பட்டு, அரசு காப்பகத்தில் தங்கி படித்து வரும் மாணவிகளை தேர்வு செய்து கால்பந்து பயிற்சி அளித்து வருகிறது. இக்குழுவில் உள்ள மாணவிகள் வெளி மாநிலம், மற்றும் வெளிநாடுக்குச் சென்று பெண்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்று பல பரிசுகளை பெற்று வருகின்றனர். தற்போது இக்குழுவில் உள்ள மாணவிகள் மகாலட்சுமி, கண்ணாத்தா, பத்மாவதி ஆகியோர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்துவரும் தேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் புதுச்சேரி அணி சார்பில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தற்போது இக்குழுவினருடன் இகாஸ் கோடை கால கால்பந்து பயிற்சி முகாமில், கடலூர் சிப்காட் டான்ஃபேக் கம்பெனி சார்பில் கால்பந்தாட்ட மாணவிகள் 40 பேருக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் டான்ஃபேக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சம்பத்குமார் மாணவிகளுக்கு சீருடை வழங்கினார். இகாஸ் செயலாளர் மாரியப்பன், பயிற்சியாளர் செங்குட்டுவன், ராஜ்மோகன், துரைசாமி, சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இகாஸ் பொருளாளர் திருமலை நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/