Friday, April 29, 2011

கடலூர் : மாநில அளவிலான போட்டி-Dina malar.

கடலூர் : மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மூன்று நாட்கள் நடந்தது. கால்பந்து, பூப்பந்து, வாலிபால், குண்டு எறிதல், ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், டெனி காய்ட் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய ஐந்து மண்டலங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விளையாடினர். அதற்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் தலைமை தாங்கினார். கடலூர் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ஆர்லிக்ஸ் செல்லதுரை முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களான டாக்ரோஸ் கம்பெனி துணை பொது மேலாளர் துர்கா பிரசாத், நாகர்கோவில் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் முருகன், அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரேணுகாதேவி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/