Tuesday, April 19, 2011

Vadalur CC-Young Rovers trophy.-Dinamalar 19 04 11

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் பாலிடெக்னிக்கில் 7 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடந்தது. பண்ருட்டி அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு பண்ருட்டி யங்ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்தது. இதில் 7 அணிகள் பங்கேற்றதில் வடலூர் வள்ளலார் கிரிக்கெட் கிளப் முதலாம் இடமும், அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரி 2ம் இடத்தையும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கிளப் தலைவர் கலைரஞ்சன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல்., அதிகாரி வளையாபதி முன்னிலை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ரெஜினால், கல்லூரி முதல்வர் சவரிராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கி பேசினர். கிளப் செயலாளர் முகமதுரஸா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/