Sunday, April 24, 2011

"செஸ்" விளையாட்டுப் போட்டி-dina malar


கடலூர்:கடலூர் மாவட்ட அளவிலான "செஸ்" விளையாட்டுப் போட்டியில் கடலூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர் முதல் இடம் பெற்றார்.
மாவட்ட அளவிலான "செஸ்" விளையாட்டுப் போட்டி, சதுரங்க கழகம் சார்பில் கடந்த 10ம் தேதி பண்ருட்டியில் நடந்தது. இதில் 15 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் கடலூர் முதுநகர் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் அம்ரிஷ் முதல் இடத்தைப் பிடித்தார். மேலும் மாணவர் பாரதிமோகன் நான்காம் இடத்தையும், கோகுல் ஐந்தாம் இடத்தையும் பிடித்தனர்.மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைவர், முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/