மதுரை : மதுரை மாவட்ட வாலிபால் கழகம் மற்றும் டி.ஒய்.எப்.ஐ., அமைப்பின் சார்பில், 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஏப்., 25 முதல் மே 10 வரை காலை 6 முதல் 8 மணி, மாலை 4 முதல் 6 மணி வரை இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது பால், முட்டை, பிஸ்கட் இலவசமாக வழங்கப்படும். தேசிய விளையாட்டு வீரர் முத்துக்குமார் பயிற்சியளிக்கிறார். விருப்பமுள்ளவர்கள் ஏப்., 22 மாலை 4 மணிக்கு, செயின்ட் பிரிட்டோ பள்ளி வளாகத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். நிறைவில் போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ், சீருடை வழங்கப்படும். பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்படும் என கழகத் தலைவர் விவேகானந்தன், செயலாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளனர். கூடுதல் தகவல்களுக்கு 94439 90964, 98432 33445 ல் தொடர்பு கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/
-
Veda Dharma Sastra Paripalana December 18 at 2:26am · KALPAKKAM "VEDA SAMELANAM" by Veda Dharma Shastra Pari...
-
Shri Yagnarama bagavatar and cuddalore shri muralidhara sharama [dhivyanam at tiruvisalur- 37 mts. http://youtu.be/BI1M75gWVF4
No comments:
Post a Comment