Tuesday, April 19, 2011

Coaching camp at Cuddalore 19 04 11

கடலூர் : கடலூரில் கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் துவங்கியது. இந்திராகாந்தி அகாடமி விளையாட்டு மற்றும் கல்விக் கழகம் சார்பில் கோடை கால கால்பந்து சிறப்பு பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி துவக்க விழாவில் இந்திராகாந்தி அகாடமி விளையாட்டு மற்றும் கல்விக் கழகத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலர் மாரியப்பன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.சி., ஜெயச்சந்திரன் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். சம்பத், துரைசாமி பாராட்டிப் பேசினர். விழாவில் பயிற்சியாளர் செங்குட்டுவன் உட்பட பலர் பங்கேற்றனர். இப்பயிற்சி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. பொருளாளர் திருமலை நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/