Friday, September 23, 2011
சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி
கடலூர்:சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் விளையாட
14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு வரும் 25ம் தேதி கடலூர் அண்ணா
விளையாட்டரங்கில் நடக்கிறது.தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் சார்பில்
வரும் செப்., 30ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரையில் 14 வயதிற்குட்பட்ட
மாணவ, மாணவியர் கைப்பந்து வீரர்களுக்கான மாநிலப் போட்டி சென்னையில் நடைபெற
உள்ளது.அதனைத்தொடர்ந்து அக்., 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை 16
வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் கைப்பந்து வீரர்களுக்கான மாநில போட்டியும்,
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடக்கிறது.
இதற்காக கடலூர் மாவட்ட கைப்பந்து அணிக்கான மாணவ, மாணவியர் வீரர்களின் தேர்வு வரும் செப்., 25ம் தேதி மாலை 2.30 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.இத்தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் கைப்பந்து வீரர்கள் 96ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அன்றோ அல்லது அதன் பிறகோ பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். பள்ளி மாணவர்கள் அவரது பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து பிறப்புச் சான்றிதழினை பெற்று வர வேண்டும். பள்ளிசாரா மாணவர்கள் நகராட்சி அல்லது பேரூராட்சி அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழை கொண்டு வருதல் வேண்டும்.இத்தகவலை மாவட்ட கைப்பந்து கழகச் செயலர் முரளிதாஸ் தெரிவித்துள்ளார்.

Dinamalar-மதுரையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டி
கடலூர் : மதுரையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கடலூர்
மாவட்ட அணி 16 தங்கம் உட்பட 38 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். மாநில
அளவிலான நீச்சல் போட்டி மதுரை எம்.ஜி.ஆர்., விளையாட்டரங்க நீச்சல்
குளத்தில் நடந்தது. எட்டு பிரிவுகளில் நடந்த போட்டியில் மாநிலத்திலிருந்து
20க்கும் மேற்பட்ட அணிகளைச் சேர்ந்த 474 பேர் போட்டியில் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட அணி சார்பில் 23 பேர் பங்கேற்றனர். இதில் கடலூர் சி.கே.பள்ளி
மாணவர்கள் செபாபிராங்களின் ஒரு தங்கம், 2 வெள்ளியும், டேவிஸ் நிரஞ்சன் 2
தங்கம், ஒரு வெள்ளியும், ரக்ஷனா 3 தங்கமும் பெற்று தனி நபர் சாம்பியன்
பட்டம் பெற்றனர். கவுரவ் சேகரன், ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம்
பெற்றார். சவுந்தர்யா தேவி ஒரு தங்கம், 2 வெள்ளியும், ராகேஷ் ஒரு தங்கம்,
ஹரிணிஸ்ரீ 2 வெள்ளி, ஒரு வெண்கலமும் பெற்றார்.
ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி மாணவர்கள் சுபாஷ் சந்தர் 2 தங்கம், அபிஷேக் ஒரு தங்கம், ஒரு வெண்கலமும், சஞ்சய், குமரேஷ் தலா ஒரு தங்கம், குமரேஷ் இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்றார். கிருஷ்ணசாமி பள்ளி மாணவர் லத்திஷ் ஷரண் ஒரு தங்கம் பெற்றார். அக்ஷரா பள்ளி மாணவர் ராகவேந்திரன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வெற்றார். மதர் தெரசா பள்ளி மாணவி ருக்ஷனா 3 வெள்ளி பெற்றார். ஆரோ சைல்டு பள்ளி மாணவர் விமல் ஒரு வெள்ளி வென்றார். புனித அன்னாள் பள்ளி மாணவி லட்சுமி சுவாதிகா ஒரு வெண்கலம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், நீச்சல் பயிற்றுனர் அருணா ஆகியோர் பாராட்டினர்.

Subscribe to:
Comments (Atom)
https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/
-
http://youtu.be/bNZh4X9llWo-hear only audio.129 minutes -01 07 12.
-
videos 1 http://youtu.be/31FDOHhRyuQ -3 mts http://youtu.be/TjzxgVW6jQ8 -4 mts http://youtu.be/3ESiQea-wdQ -3 mts http://youtu....