Friday, September 23, 2011

சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

கடலூர்:சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் விளையாட 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு வரும் 25ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் சார்பில் வரும் செப்., 30ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரையில் 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் கைப்பந்து வீரர்களுக்கான மாநிலப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.அதனைத்தொடர்ந்து அக்., 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் கைப்பந்து வீரர்களுக்கான மாநில போட்டியும், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடக்கிறது.

இதற்காக கடலூர் மாவட்ட கைப்பந்து அணிக்கான மாணவ, மாணவியர் வீரர்களின் தேர்வு வரும் செப்., 25ம் தேதி மாலை 2.30 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.இத்தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் கைப்பந்து வீரர்கள் 96ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அன்றோ அல்லது அதன் பிறகோ பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். பள்ளி மாணவர்கள் அவரது பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து பிறப்புச் சான்றிதழினை பெற்று வர வேண்டும். பள்ளிசாரா மாணவர்கள் நகராட்சி அல்லது பேரூராட்சி அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழை கொண்டு வருதல் வேண்டும்.இத்தகவலை மாவட்ட கைப்பந்து கழகச் செயலர் முரளிதாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/