கடலூர் : மதுரையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கடலூர்
மாவட்ட அணி 16 தங்கம் உட்பட 38 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். மாநில
அளவிலான நீச்சல் போட்டி மதுரை எம்.ஜி.ஆர்., விளையாட்டரங்க நீச்சல்
குளத்தில் நடந்தது. எட்டு பிரிவுகளில் நடந்த போட்டியில் மாநிலத்திலிருந்து
20க்கும் மேற்பட்ட அணிகளைச் சேர்ந்த 474 பேர் போட்டியில் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட அணி சார்பில் 23 பேர் பங்கேற்றனர். இதில் கடலூர் சி.கே.பள்ளி
மாணவர்கள் செபாபிராங்களின் ஒரு தங்கம், 2 வெள்ளியும், டேவிஸ் நிரஞ்சன் 2
தங்கம், ஒரு வெள்ளியும், ரக்ஷனா 3 தங்கமும் பெற்று தனி நபர் சாம்பியன்
பட்டம் பெற்றனர். கவுரவ் சேகரன், ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம்
பெற்றார். சவுந்தர்யா தேவி ஒரு தங்கம், 2 வெள்ளியும், ராகேஷ் ஒரு தங்கம்,
ஹரிணிஸ்ரீ 2 வெள்ளி, ஒரு வெண்கலமும் பெற்றார்.
ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி மாணவர்கள் சுபாஷ் சந்தர் 2 தங்கம், அபிஷேக் ஒரு தங்கம், ஒரு வெண்கலமும், சஞ்சய், குமரேஷ் தலா ஒரு தங்கம், குமரேஷ் இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்றார். கிருஷ்ணசாமி பள்ளி மாணவர் லத்திஷ் ஷரண் ஒரு தங்கம் பெற்றார். அக்ஷரா பள்ளி மாணவர் ராகவேந்திரன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வெற்றார். மதர் தெரசா பள்ளி மாணவி ருக்ஷனா 3 வெள்ளி பெற்றார். ஆரோ சைல்டு பள்ளி மாணவர் விமல் ஒரு வெள்ளி வென்றார். புனித அன்னாள் பள்ளி மாணவி லட்சுமி சுவாதிகா ஒரு வெண்கலம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், நீச்சல் பயிற்றுனர் அருணா ஆகியோர் பாராட்டினர்.

No comments:
Post a Comment