டெங்கு ஒழிப்பு: மாவட்டத்தில் துப்புரவுப் பணி தீவிரம்
By
கடலூர்
First Published : 16 November 2012 12:42 PM IST
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க மாவட்ட ஆட்சியர்
ராஜேந்திர ரத்னூ உத்தரவிட்டுள்ளார். இதன்படி வியாழக்கிழமைதோறும் 11 முதல்
12 மணி வரையில் அனைவரும் தங்கள் பகுதியில் இருந்து 100 மீட்டர் தூரம்
சுத்தம் செய்ய வேண்டும்.
÷கடலூர்: கடலூர் நகர்மன்றம் சார்பில் 45
வார்டுகளிலும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. நகர் மன்றத் தலைவர்
சி.கே.சுப்பிரமணியன் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த துப்புரவுப் பணியை
தொடங்கி வைத்து கழிவுகளை சேகரித்தார்.
÷இப்பணியில் நகராட்சி ஆணையர்
(பொறுப்பு) ரவி, கவுன்சிலர் கந்தன், சேரலாதன், சுகாதார ஆய்வாளர் சக்திவேல்,
நகராட்சி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள், சுயஉதவிக்
குழுவினர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
÷பண்ருட்டி: பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த டெங்கு
காய்ச்சல் தடுப்புப் பணியை நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர்
எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
÷உடன்
ஒன்றிய பெருந்தலைவர் மாலதி கமலக்கண்ணன், பண்ருட்டி ஒன்றியச் செயலர்
கமலக்கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தேவநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
துரை, அருணாசலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், பழனிசாமி
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
÷மேலும் பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள 42
பஞ்சாயத்துக்களிலும் உள்ள குக்கிராமம் வரையில் ஆட்டோ மூலம்
விழிப்புணர்வுப் பிரசாரமும், துண்டுப்பிரசுரங்களும் விநியோகித்தனர். ÷
தெருக்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்தும், தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்தனர்.
பண்ருட்டி சேமக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடந்தது.
÷பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் டெங்கு நோய் குறித்தும், தடுப்பு
நடவடிக்கை குறித்தும், கொசு ஒழிப்பு, பிளாஸ்டிக் பொருள் தீமைகள் குறித்த
கோஷங்களை எழுப்பியவாறு சேமக்கோட்டை கிராமத்தின் அனைத்து வீதிகள் வழியாக
சென்றனர்.
பேரணியை பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட இணை கன்வீனர் வெ.வீரப்பன் வரவேற்றார்.
உதவி தலைமையாசிரியர் ராஜராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நெய்வேலி
நெய்வேலி, நவ. 15: நெய்வேலியில் உள்ள என்எல்சி பெண்கள் மேல்நிலைப்
பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி மற்றும் விளக்க
நிகழ்ச்சி புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.
÷நெய்வேலி
வட்டம் 11-ல் உள்ள என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் படை
சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
÷இதைத் தொடர்ந்து என்எல்சி நகர நிர்வாக சுகாதாரத் துறை அலுவலர் கனிஜாவித் தலைமையில் சுகாதார விழிப்புணர்வு உரை நடைபெற்றது.
÷அதையடுத்து பள்ளியின் பசுமைப் படை பொறுப்பாசிரியர் பாலகுருநாதன், தேசிய
மாணவர் படை பொறுப்பாசிரியர் ஜெயசீலி, சாரண, சாரணியர் பொறுப்பாசிரியர் சுமதி
மற்றும் உடற்கல்வி இயக்குநர் ரேவதி ஆகியோரின் வழிகாட்டுதல்படி மாணவியர்கள்
நெய்வேலி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று டெங்கு காய்ச்சல்
விழிப்புணர்வுக் குறித்து துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியதோடு,
மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சுத்தம் செய்தனர்.
÷முன்னதாக விழிப்புணர்வுப் பேரணியை பள்ளித் தலைமையாசிரியை ஆர்.எஸ்.மணிமொழி தொடங்கி வைத்தார்.
உதவித் தலைமை ஆசிரியர் தங்கராசு முன்னிலை வகித்தார். பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பங்கேற்றனர்.
உதவி ஆட்சியர் ஆய்வு
சிதம்பரம், நவ. 15: சிதம்பரம் நகரில் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் நீர்த் தேங்கியும், குப்பைகள் அகற்றப்படாமல் உள்ள சுகாதாரக்
கேடான பகுதிகளை உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன், வட்டாட்சியர் க.தனசிங்
ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
÷அப்போது சிதம்பரம் பஸ் நிலையப்
பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் பலகாரக் கடைகளில்
நீர் தேங்கி சுகாதார கேடாக இருந்ததை கண்டு, அக்கடை உரிமையாளர்களுக்கு
உடனடியாக அப்புறப்படுத்த எச்சரிக்கை விடுத்தார்.
÷பஸ் நிலையக்
கட்டடத்தின் மாடிப் பகுதியும், கழிப்பறை குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஆகியவை
மிகவும் துர்நாற்றத்துடன் இருந்ததை கண்டறித்த உதவிஆட்சியர் நகராட்சி
அலுவலர்களை அழைத்துக் கண்டி
த்தார்.