Friday, November 9, 2012

கடைக்காரர்களுக்கு டோஸ் விட்ட கலெக்டர்-dinamalar.


கடைக்காரர்களுக்கு டோஸ் விட்ட கலெக்டர்
 நவம்பர் 09,2012




கடலூர்: கலெக்டர் அலுவலகம் எதிரே சுற்றுப்புறத்தை சுகாதாரமில்லாமல் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு கலெக்டர் "செம டோஸ்' விட்டார். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவை முற்றிலும் ஒழிக்க முன் மாதிரித் திட்டத்தின் துவக்க நாளான நேற்று கலெக்டர் ராஜேந்திர ரத்னு, அலுவலகத்தைச் சுற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அலுவலகத்திற்கு எதிரே வரிசையாக வைத்திருக்கும் பிரியாணி கடைகளுக்குள் நுழைந்து உணவு சுகாதாரமாக இருக்கிறதா என சோதனை செய்தார். கடையின் பின் பகுதியில் சகதியாய் இருந்ததுடன் பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததைப் பார்த்து கலெக்டர் கடுப்பானார். உடனே கடைக்காரர்களை அழைத்து "செமடோஸ்' விட்டார். தொடர்ந்து, "இதேப்போன்று குப்பைகளாகவும், சுகாதார கேடு ஏற்படும் வகையில் இருந்தால் அனைத்து கடைகளையும் உடனடியாக காலி செய்து விடுவேன்' என எச்சரித்தார். மைதானத்தில் சுயஉதவிக்குழு நடத்தும் ஆவின் கடையில் கப்புகள் சிதறிக் கிடந்ததை கலெக்டர் சேகரித்து கூடையில் போட்டார். சுயஉதவிக்குழு பெண்களிடம் இப்படி கண்ட இடங்களில் கப்புகளை போடலாமா என கேட்டார். மீண்டும் இவ்வாறு நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். கடைகளுக்கு பின் பகுதியில் இளநீர் மட்டைகள் குவியலாக கிடந்தன. இதில் பெரும்பாலான மட்டைகளில் தண்ணீர் இருந்தது. டெங்குவை உருவாக்கும் இந்த இளநீர் மட்டையை கலெக்டர் மற்றும் சுகாதார அதிகாரிகள் தண்ணீரை கொட்டி காலி செய்தனர். இந்நிகழ்ச்சியில் பி.ஆர்.ஓ., தமிழ்ச் செல்வராஜன் உடனிருந்தார்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/