Thursday, November 15, 2012

டெங்கு காய்ச்சல் தொடர்பான ஆட்சியர் உத்தரவு:Dina mani



டெங்கு காய்ச்சல் தொடர்பான ஆட்சியர் உத்தரவு:  மீறுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை

 

 கடலூர்

First Published : 13 November 2012 05:50 AM IST

 



கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக ஆட்சியரின் உத்தரவை மீறுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ எச்சரித்துள்ளார்.
 இது குறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 கடலூர் மாவட்டத்தில் டெங்கு நோய் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 மேலும் இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு செய்திகள், எஸ்.எம்.எஸ் ஆகியவற்றின் வாயிலாகவும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 இதன் ஒரு கட்டமாக, கடந்த 8-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
 இப்பணி ஒவ்வொரு வியாழக்கிழமையும் தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. கழிவுப் பொருள்களை தூக்கி வீசாமல் தரம்பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும்.
 சுற்றுப்பகுதியில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாரம்தோறும் வியாழக்கிழமை ஒரு மணிநேரம் அவரவர் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
 இப்பணிகளை கண்காணிக்க, வருவாய்துறை, சுகாதாரத் துறை மற்றும் போலீஸôர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
 இதில், ஆட்சியரின் உத்தரவை மீறுபவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 144-ன்படி மாவட்ட ஆட்சியருக்கு உள்ள அதிகாரத்தின் படி 188 அ, 269, 270 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/