எண்ணிய நான்
எண்ணியவாறு- கல்கி இதழ் 1981 எல் ஏ வி ராமன்.
·
வத்தலகுண்டின்
ஒரு திருமணம். பெரியவர் மதுரையை அடுத்த திருநாராயணபுரத்தில்
இருப்பதாகச் சொன்னார்கள். உடனே என் மனைவியையும்
பையனையும் (8 வயது) அழைத்துக்
கொண்டு மதுரைக்குப் புறப்பட்டேன்.
பெரியவர் என் பக்கத்தில் இருந்த என் பையனைப் பார்த்து ‘என்ன பேர்’ என்றார். என்னை அறியாமல்
நானே பேசினேன்.”நீங்கள் 20 வருடங்களுக்கு முன் லால்குடிக்கு வந்திருந்தேளே.அபிஷேகத்திற்கு
டாக்டர் காரில் திருச்சியிலிந்து பாலைக் கொண்டு வருவேனே. நீங்கள் அந்தப் பசு மாட்டுக்
கொட்டகையில் படுத்திருப்பேளே என்றேன். உங்கள்
ஞாபகமாய்த்தான் இவனுக்கு சந்திரசேகரன் என்று பெயர் வச்சிருக்கேன் என்றேன். இவனை ஆசீர்வதியுங்கள் என்று அழுதேன்.
ஞாபகமாய்த்தான் இவனுக்கு சந்திரசேகரன் என்று பெயர் வச்சிருக்கேன் என்றேன். இவனை ஆசீர்வதியுங்கள் என்று அழுதேன்.
பெரியவர் என் பையன் மேல் இரு கரங்களையும்
உயர்த்தி ‘நாராயணா நாராணயா என்றார். சிறிது நேரத்தில் காவி உடையைப் போர்த்தி ஒரு பக்கமாய்த்
திரும்பிக் கண்களை மூடிப் படுத்து விட்டார்.
சந்திரசேகரன் படிப்பில் முதல் நிலையில் வர
ஆரம்பிருத்தான். ஏராளமான ஸகாலர்ஷிப் பெற்றான். இன்சினீயரிங்கில் முதலில் பாஸ் செய்தான்.
டெல்லியில் விருது பெற்றான். பாம்பேயில் ஒரு நிறுவனத்தில் அதிகாரியான ஆனான். அமெரிக்காவில்
;பெலொஷிப் கிடைத்தது. வெளிநாடு போகும் முன்
நண்பர் இராமசந்திர அய்யர் சந்திரசேரனை காரில் சத்தாரா அழைத்துச் சென்னு அவர் ஆசியை மறுபடி வாங்கிக் கொடுத்தார்.
எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம்
காஞ்சிப் பெரியவாள். ஒரு சாஷாத் பரமேஸ்வர ஸ்வருபம்.
No comments:
Post a Comment