மூன்றாம் மாடியிலிருந்து
விழுந்த விசாகன். கல்கி இதழ் 1981 என் சீனுவாசன்
மூன்றாம் மாடி;யிலிருந்து
எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த என் மகன்
சி. விசாகன்
(அப்பொழுது வயது நான்கு) கால் தவறிக் கீழே விழுந்து விட்டான். மூர்ச்சசையடைந்த அவனை
ராயப்பபேட்டை ஆஸ்பத்திரிக்கு விரைந்து எடுத்துச்
சென்றோம். தலையிலும் மற்ற பாகங்களிலும் உடனுக்குடன் பல எக்ஸ்ரே எடுத்துப் பாத்ததில்
எந்தவித எலும்பு முறிவும் இல்லவே இல்லை. பக்கதிலிருந்த மரங்களின் மீது உரசி விழுந்ததால்
இங்கும் அங்கும் சில சிராய்ப்புக்கள் தான் இருந்தன. டாக்டர்களுக்கே ஆச்சரியம்.
மயக்கதிலிருந்த
அவன் ஆறு மணிக்கு மெள்ள நினைவு பெற்றுக் கண் திறந்து பார்த்துத் தட்டுத் தடுமாறி பேசினான்.
“ அப்பா எட்டிப் பார்க்கும்போது கால் தவறி விழுந்து விட்டேன்.. அப்பொழுது நீ புஜை செய்யும்
போட்டோவில் இருக்கும் பெரியவர் என்னை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு நெற்றியில் விபுதி
குங்கும் இட்டார். என்று அவன் கூறியதைக் கேட்டு டாக்டரும் பக்கத்திலிருந்த நாங்குளும்
வியந்தோம். அதே சமயத்தில் காஞசிக்குச் சென்று என் வீட்டுக்கு ;அடுத்த வீட்டிலிருந்த ஶ்ரீஅரி அர அய்யர்
என்பவர்
பெரியவாளின் பிரசாத்துடன் வந்து விஷயம் தெரிந்து
ஆச்சரியப்பட்டு அதிர்ந்து நின்றார்.
இன்றும்
பெரியவா மூன்றாம் மாடியிலிருந்த விசாகன் என்ன படிக்கிறான்.
எ
ப்படி இருக்கிறான் என்று நாங்கள் தரிசனம் செய்யும்
போதெல்லாம் விசாரிப்பார். அவன் இந்த வருடம் பி காம் இறுதி ஆண்டு பரிட்சை எழுதுகிறான். ( 1981 இதழில் வந்த நிகழ்ச்சி)
No comments:
Post a Comment