Wednesday, December 11, 2013

11 12 13 ஶ்ரீ கணேச சர்மா சங்கரா டிவி


11 12 13 ஶ்ரீ கணேச சர்மா சங்கரா டிவி

பெரியவா வழி எப்பவும் எளிமையாக இருக்கும். சுற்றி சுற்றி தர்மத்தை தான்
சொல்லுவா. காசு பணம் செலவு கிடையாது. எது பண்ணின சாச்வதம். ஸ்திரம் சேமம் அதில  பெரியவா சொல்லிக் கொண்டு இருப்பா.

காக்காவுக்கு ஏன் சாப்பாடு போட வேண்டும்.

பெரியவாளிடம் ஒரு  பக்தை வந்து நா எங்கு போனாலும்  காக்கா துரத்துது. நான் என்ன பண்ணறது புரியலை வந்து நின்னா. பெரியவா நீ காக்காவுக்கு சாப்பாடு போடுவியா என கேட்டா.  பின்னர் நீ தினக்கும் காக்காவுக்கு சாப்பாடு போடு நல்லெண்ணெய் போட்டு சாமிக்கு விளக்கு போடு சனிக்கிழமையில சிவன் கோயில் போயிட்டு வா என்ற அறிவுரைகள சொன்னா. அந்த பக்தையும் போயிட்டா.

பெரியவா அங்கு இருந்த தொண்டர்களிடம் ஏண்டா இந்த மடத்துக்கு யானை   பெருச்சாளி எலி அணில் குரங்கு புனை எல்லாம் வரது ஆட்டம் போடுது. ஆனா இந்த காக்கா மட்டும் ஏண்டா வரலை.

அவரிடம் இருந்த கண்ணன் தொண்டர் பெரியவா சாட்சாத் பரமேஸ்வரன். பரமேஸ்’வரன் இருக்க சனீஸ்வரனுக்கு என்ன வேலை. மேலும் பரமேஸ்வரனுக்கு பயந்து சனிஸவரன் தன் வாகனத்தை மடத்துக்கு அனுப்பலை. அதாவது காக்கா வரலை என்று சொல்ல பெரியவா உடனே சிரிச்சா.

·         காக்கா பிதிரு சொருபம்ஆ  இருக்கா என்று சொல்லுவா. அதனால சிரார்த்தம் அன்னிக்கு காக்காக்கு சாதம் போடறோம். எல்லா பிதிருக்களும் காக்காவா வந்திருக்கா என்று சொல்லுவா. பகவான் எல்லாத்திலுக்கும்  இருக்கும் என்று சொல்லுவா. காக்காவிலும் பகவான் இருக்கான். சாதம் போடுவதால் நாம பித்ருக்களை பிரித்தி பண்றதா நினைக்கிறோம்பகவான் எல்லாதிலும் இருக்கா என  காக்காவிலும் பகவான் இருக்கா. நாம சுவாமிக்கு நைவேத்தியம் பண்றோம். பகவான் சாப்பிடுகிறாரா?   ஆனால் அந்த சாதத்தை காக்காவிற்கு போடும் போது அந்த காக்காவலுள்ள அந்தர்யாமியாக உள்ள பகவான்  கொத்தி கொத்தி சாப்பிடுற  நாம  பார்க்கலாம இல்லையா. அங்கு இருந்த வித்வான்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டா ஏன்னா காக்காவிற்கு சாதம் போடறதா எப்படி வியாக்கனம்  பண்றா என்று.

பெரியவா அத்வைத சொருபமாக இருந்தா இருக்கா. பெரியவாளுக்கு எலியும் ஒன்னுதா. காக்காவும் ஒன்னுதாம். அதைவிட சொல்ற அழகு தனி அழகாக இருந்தது. வித்வான்கள் எல்லாம் ரசிச்சாஃ

பித்ருக்களை பிரித்தி பண்ண மாதிரி மாச்சு. அதைப் போல பகவானை ஆராதனனை  பண்ண மாதிரி ஆச்சு. பகவானுக்கு சாதம் போடுகிறோம். ஆனால் காக்கா கொத்தி சாப்பிடுதறதை பார்;த்தா ஆனந்தாமா இருக்கு.
காத்தால காக்கைக்கு சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணிட்டு போடறோம். அத போல ராத்திரி நாய்க்கு சாதம் போடுவது நமது சம்பிரதாயம். இதை மனிதாபம் சொல்றோம். அததான் சாஸ்திரம் சொல்றது. நமக்கு எல்லா ஜிவ ராசிகளிடம் நமக்கு அன்பு வரணும்

தாயுமானவர் சொல்றார். பகவானை பாருங்கோ நானு காக்கா மாதிரி சொல்ற. ஆனா நாம யாரும் பரமானந்தத்தை அடைய முயலலை.நானும் காக்கா மாதிரி எல்லாரும் பகவானை அடையனும்ற. காக்கா மாதிரி நானும் கத்தற. பகவரனை அடையலாம். யாரும் வரமாட்டேங்கிறா. அதனால வருத்தம் படறார்.

அதைப் போல சின்ன சின்ன உயிரினங்கள் சாப்பிடுதற பார்த்து ரசிக்கனும். இது மாதிரி இருந்தா நம் கிட்ட இருக்கிற தோஷங்களா போயிடும். நாமும் பு மாதிரி ஆயிடுவோம். அதாதான் பெரியவா நாம் எல்லாம் அன்பு மயமாக இருக்கணும் சொல்றா. நாமும் பெரியவா வழியல நடப்போம்.



No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/