05 12 13 கோனேரிராஜபுரம் சென்றிருந்தேன். ;பெருமாள் கோயில் தெருவில் இருக்கும் திருமதி லலிதா மாமியை பார்க்க சென்றேன். அந்த வீட்டில் பெரியவா படம் இருந்தது. உடனே கையில் இருந்த காமிரா எடுத்து பெரியவா படத்தை எடுத்தேன். உடனே அந்த மாமி பெரியவா நான் இருந்த இடத்தை காண்பித்து பெரியவா 50 வருடங்களுக்கு முன் இந்த வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கி புஜை செய்தார் என்று சொன்னவுடன் எனக்கு உடனே வீடியோ காமிரா எடுத்து நீங்க பேசுங்கோ என்று சொன்னே. பெரியவா விஸ்ராந்தியா இருக்கும் போது தோட்டத்தில் ரோஜா செடி கிட்ட பலாப்பழத்தை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துப்பா என்று சொன்னவுடன் எனக்கு ஒரு மாதிரியாடுத்து. ஏன்னா நாம தலைகாணி வைத்து படுக்கிறோம். பலாப்பழத்தில முள் இருக்குமே என தோணிச்சு.
கொள்ளு தாத்தா பெரியவாளை சிவிகையில வைத்து துக்கிண்டு போவாளா. பெரியவா உடனே தோள் பட்டை வலிக்குதா என கேட்டு உடனே தோளை தடவிக் கொடுப்பாளா. தெய்வம் மனிதனிடம் எவ்வாறு பழகி இருக்கு நினனக்கும் போது புல்லரிக்குது. பேரன்கள் என்ன சொல்றான்ன நமக்கு சொத்து சுகம் இருக்கோ இல்லையோ ஆனா நாம பெரியவாளை தொட்டு துக்கியிருக்கோம் பரம்பரையிலுருக்கோம் அதுவே சந்தோசம்தானே.
சீனு மாமா சென்னையிலுக்காராம். அவரிடம் பல கதைகள் இருக்காம். அவரையும் விரைவில் பெரியவா அருளுடன் சந்திப்போம்.
Konerirajapuram Perumal koil st. first house left side Smt Lalitha mami speaks to R.V.Jayaraman about Periyava .Periyava stayed in that house for two months and performed puja. This was about some 50 to 60 years back.Periyava used jack fruit to take rest for his head. Grand sons are happy that that their elders took Periyava on their shoulders - civigai-. Shri Seenu mama who is at Chennai has more information to be shared. He will be also interviewed shortly. I visited the house on 05 12 13 and the family is totally blessed one.
Konerirajapuram Smt Lalitha mami shares experiences of Periyava - performed puja in her house some 50 years back. 05 12 13.
http://youtu.be/XQT1O9o-1Ok
No comments:
Post a Comment