Thursday, January 16, 2014

Sri Atma Bodendra Saraswathy Swamigal Jayanthi function at Vadavambalam






விழுப்புரம் அருகில் உள்ளது வடவாம்பலம் கிராமம். 1926-ம ஆண்டு மகா பெரியவர் அந்த வழியாக போகும்போது மனதில் ஏற்பட்ட திடீர் சலனத்தின் காரணமாக அந்த கிராமத்துக்குள் தன் பரிவாரங்களுடன் நுழைந்தார்.”இங்கே ஒரு சந்நியாசி இருந்தாரே, ஞாபகம் இருக்கிறதா? என்று எதிர்பட்ட கிராமத்து முதியோர்களிடம் கேட்டார், யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த கும்பலில் இருந்த ஒரு முதியவர் மட்டும் அந்த ஊரில் பல வருடங்களுக்கு முன் ஒரு துறவி இருந்ததாகவும், அவர் அதே ஓரில் சமாதி அடைந்ததாகவும் சொன்னார். இரண்டு, மூன்று வருடங்கள் அவரது சமாதிக்கு பூஜைகள் தொடர்ந்து நடந்ததாகவும், பிறகு அது நின்று போனதாகவும் சொன்னார். ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னும் 58-வது பீடாதிபதி அங்கேதான் சமாதி அடைந்திருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட மகான் அந்த கிராமம் முழுக்கத் தேடி அவரது சமாதியை கண்டுபிடித்தார். பிறகு தன்னுடன் வந்த அடியார்களில் ஒருவரிடம் அந்த இடத்தை தோண்ட சொன்னார்.’அகலமாக வேண்டாம், ஆழமாக தோண்டுங்கள்’ என்று கட்டளையிட்டார். 

மண்வெட்டிஎடுத்து மகான் காட்டிய இடத்தை தோண்டினார் ஒருவர். அப்போது அருகில் இருந்த குமாரமங்கலம் சாம்பமூர்த்தி சாஸ்திரி என்பவர் மெய்மறந்து ‘தோண்டாதே தோண்டாதே’ என்று கூச்சலிட்டு அங்கேயே மயங்கி விழந்தார். தோண்டிய ஆசாமி திகைத்துபோய் உடனே தோண்டுவதை நிறுத்தினார். வெகு நேரத்துக்கு பிறகுதான் அவரது மயக்கம் தெளிந்தது. மகான் சாம்பமூர்த்தி சாஸ்திரியிடம் மெதுவாக விசாரித்தார். ‘உடலில் காவி .. கையில் தண்டம். கழுத்தில் ருத்திராட்ச மாலை .. நெற்றி நிறைய விபூதி .. இத்துடன் ஆகாயத்தை தொடுமளவு ஒரு துறவியின் உருவம் என் கண் முன் தோன்றியது. அவருக்கு முன்னால், ஆயிரக்கணக்கான அந்தணர்கள் வேதபாராயணம் செய்வதைக் கண்டேன். 


ஒரு கட்டத்தில் அவர் மெல்லிய குரலில் ‘தோண்டாதே .. தோண்டாதே’ என்று கூறியது என் செவிகளில் விழுந்தது. அதையே நானும் சொல்லியிருப்பேன் போலிருக்கிறது. பின்னர் அந்த நெடிய உருவம் சிறிதாகி மறைந்து போனது! ‘சதாசிவம். சதாசிவம்’ என்று யாரோ ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கேட்டேன்!’ என்றார். அதே இடத்தில்தான் ஸ்ரீஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இருப்பதை உறுதிசெய்துகொண்ட மகாபெரியவா, 1927-ஆம் வருடம் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி அதிஷ்டானத்துக்கு பிருந்தாவனம் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கே வருடா வருடம் ஆராதனை நடக்கிறது. 

Courtesy to the original uploader and writer of the article. cut and copy paste. matter from facebook.







pl.click the link below to get photos.
https://Sri Atma Bodendra Saraswathy Samigal Jayanthi function at Vadambalam-22 photos.


videos to be posted later.


Villupuram Shri Venkatesa bagavatar and party bajan at Adisthanam from 10-30 am to 12 -15 pm

http://www.veoh.com/watch/v67182613dHWhGPpZ-46 minutes. full bajans



http://youtu.be/PPpO0a9oRjk-3 mts.

http://youtu.be/GIkEfmUe66U-3 mts



Organisers speak about the jayanthi and aradhana function.
http://youtu.be/didrbUJOAqw-3 mts.





No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/