Wednesday, February 9, 2011

ஆந்திராவில் நடைபெறவுள்ள தேசிய பைக்கா போட்டி-Dinamalar


கடலூர் : ஆந்திராவில் நடைபெறவுள்ள தேசிய பைக்கா போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக வீரர்கள் நேற்று கடலூரில் இருந்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். கிராமப்புற இளைஞர்களிடம் உள்ள விளையாட்டு திறனை மேம்படுத்தும் பொருட்டு மத்திய அரசு கிராம, ஒன்றிய, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பைக்கா போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய பைக்கா போட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் நகரில் நாளை துவங்குகிறது. இப்போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்கவுள்ள வீரர்கள் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன்படி டேக்வாண்டோ, வாலிபால் மற்றும் தடகள போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு கடந்த ஒரு வாரமாக கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் டேக்வாண்டோ வீரர்கள் 13 பேருக்கு சிறப்பு பயிற்சியாளர்கள் வினாயகமூர்த்தி, இளம்பருதியும், வாலிபால் அணிக்கு தேர்வு பெற்ற 24 பேருக்கு சிறப்பு பயிற்சியாளர்கள் ஆசிர்சாம், அகிலாவும், தடகள வீரர்கள் 34 பேருக்கு பயிற்சியாளர்கள் சங்கர் காத்தவராயன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி முடிந்து அனைவரும் தங்களது பயிற்சியாளர்களுடன் நேற்று மதியம் 2 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் இருந்து சிறப்பு பஸ் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து இன்று ஆந்திரா செல்கின்றனர். கடலூரில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் வழியனுப்பி வைத்தார்.

கடலூர் : குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவர்கள் -dinamalar.

கடலூர் : குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவர்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டினார். கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் பைக்கா போட்டி நடந்தது. இதில் குத்துச்சண்டை போட்டியில் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ராஜேஷ், கார்த்திகேயன் மூன்றாமிடம் பிடித்தனர். குடியரசு தின குத்துச் சண்டை போட்டியில் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்கள் விக்னேஷ்வரன், பிராங்களின், செல்வமணி ஆகியோர் இரண்டாடமிடமும், ஜெயசீலன் நான்காவது இடமும் பிடித்தனர். வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர் பிரதாப் மூன்றாமிடமும் பிடித்தார். பஞ்சாபில் நடந்த அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான குத்துச் சண்டை போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவர் ஹரிபிரசாத், செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர் மனோ பங்கேற்றனர். குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவர்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பாராட்டினார். பயிற்சியாளர் சிவராஜ் உடனிருந்தார்.

Tuesday, February 8, 2011

: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி-Dinamalar

கோவை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை, கோவையில், பார்வையாளர்களிடம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், வரும் 19ம் தேதி துவங்குகிறது. கோப்பையை, பொதுமக்களிடையே அறிமுகப்படுத்தும் வகையில், இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது; இதில், கோவையும் ஒன்று. கோவை மக்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, ரிலையன்ஸ் சார்பில், கோவை ரெசிடென்சி ஓட்டலில், நேற்று நடந்தது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தமிழ்நாடு, கேரள மாநில மையத்தின் தலைவர் ராகேஷ் சிங், கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம், மரியாதை நிமித்தமாக வழங்கினர். சினிமா பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் இசையமைத்துப் பாடிய, போட்டிகளின் மைய நோக்கப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. கோவை காந்திபுரம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளுக்கு, திறந்த வாகனத்தில் உலகக்கோப்பை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ரிலையன்ஸ் நிர்வாகிகள், மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் லீக் -dinamalar

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் லீக் நான்காவது டிவிஷன் போட்டி முடிவுகள்:
ஸ்டன்னிங் ஸ்டிரைக்கர்ஸ் அணி பண்ணைக்காடு பண்ணை ராக்கர்ஸ் அணி யை வென்றது.அய்யலூர் கிளாசிக் அணி சீலப்பாடி பிரண்ட்ஸ் அணியை வென்றது. வசந்தாஸ் பசார் அணி சோனாமணி அணியை வென்றது. பாலு நினைவு அணி ஹார்ஸ் பவர் அணியை வென்றது. பழநி விவேகானந்தா அணியை திண்டுக்கல் சூப்பர்கிங்ஸ் அணி வென்றது. திண்டுக்கல் கே.எஸ்.ஆர்., அணி மெட்ரோ அணியை வென்றது.பெர்பெக்ட் அணி ஈகிள் அணியை வென்றது. நிலக்கோட்டை சியர் லயன்ஸ் அணி பிரண்ட்ஸ் அணியை வென்றது.பழநி எய்ம் ஸ்டார் அணி நிலக்கோட்டை ரியல் மிராக்கில்ஸ் அணியை வென்றது. கிளாசிக் அணி ஸ்டன்னிங் அணியை வென்றது. பாலு நினைவு அணி திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. காலிறுதி போட்டி: அய்யலூர் கிளாசிக் அணி வசந்தா பாய்ஸ் அணியை வென்றது. நிலக்கோட்டை சியர் லயன்ஸ் அணி பெர்பெக்ட் அணியை வென்றது.பழநி எய்ம் ஸ்டார் அணி நியூ டாமினேட்டர்ஸ் அணியை வென்றது. பாலு நினைவு அணி கே.எஸ். ஆர்., அணியை வென்றது. அரையிறுதி போட்டி: சியர் லயன்ஸ் அணியை கிளாசிக் அணியும்,பாலு நினைவு அணியை எய்ம்ஸ்டார் அணி வென்றது.


பட்டுக்கோட்டை அளவிலான ஆணழகன் போட்டி-Din amalar


பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அளவிலான ஆணழகன் போட்டி மற்றும் பெஞ்ச் பிரஸ் போட்டி ரோஷினி ஜிம்மில் நடந்தது. போட்டியில் ரோஷினி ஜிம் வீரர் மேசாக் மிஸ்டர் பெஞ்ச் 2011 மற்றும் மிஸ்டர் ரோஷினி கிளாஸிக் 2011 ஆகிய பட்டங்களை வென்றார். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகளை பட்டுக்கோட்டை நகர போலீஸ் ஸ்டேஸன் எஸ்.ஐ., சுகுமாரன், வக்கீல் இளங்கோவன் மற்றும் ரோஷினி ஜிம் பயிற்சியாளரும் இந்திய இரும்பு மனிதன் பட்டம் வென்றவருமான சர்வதேச வலுதூக்கும் வீரர் நாடிமுத்து ஆகியோர் வழங்கினர். இந்த போட்டிக்கு நடுவராக சென்னையை சேர்ந்த இந்திய ஆணழகன் சங்க நடுவர் அமீர்பாஷா பணியாற்றினார். ஆணழகன் போட்டியில் 50 கிலோ எடைபிரிவில் பாலாஜி, மணிமாறன், 55 கிலோ எடை பிரிவில் மேசாக், பிரகாஷ், ரமேஷ், 60 கிலோ எடைப்பிரிவில் சதீஷ், பயாஸ் அஹமது, அக்பர் ஆகியோரும், 65 எடை பிரிவில் முகமது அலிஜின்னா, செபஸ்டின், பழனிச்சாமி ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.

பெஞ்ச் பிரஸ் போட்டியில் 56 கிலோ எடை பிரிவில் ஸ்ரீதரன், அப்துல் அஜிஸ், 60 கிலோ எடை பிரிவில் மேசாக், அப்துல் பூட்டோ, 67 கிலோ எடை பிரிவில் முருகானந்தம், சுகுனேஷ்வரன், ஏனாதி மதன்ஆகியோரும், 75 கிலோ எடை பிரிவில் செந்தில்குமார், முகமது அலிஜின்னா, சீனிவாசன் மற்றும் 75 கிலோவுக்கு கூடுதல் எடை பிரிவில் கவின்சான்ட்ரோன், மதியழகன், அரவிந்தன் ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர். முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

செஞ்சி சாணக்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி

செஞ்சி : செஞ்சி சாணக்யா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் லட்சுமணதாஸ் வரவேற்றார். விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து டி.எஸ்.பி., விநாயகம் பேசினார். உடற்கல்வி ஆசிரியர்கள் பிரேமா, சரோஜா ஆகியோர் போட்டிகளை நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியன் வங்கி கிளை மேலாளர் ஹரிநாத் பரிசுகள் வழங்கினார். முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சேத்துப்பட்டு பல்லவன் வங்கி கிளை மேலாளர் சிவசங்கர் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

Dinamalar sports page-cricket

Monday, February 7, 2011

கடலூர் ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் விளையாட்டுப் போட்டி-dinamalar

கடலூர் : கடலூர் ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி முதல்வர் ராஜயோககுமார் வரவேற்றார். முதன்மை விருந்தினரான பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் அருளப்பன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். மாணவர்கள் சுதாகரன், பாலாஜி, மாணவிகள் சுவேத ஸ்ரீ, செல்ஷியா, ஸ்ரீநிதி ஆகியோருக்கு தனித்திறன் கோப்பைகள் வழங்கப்பட்டது. அதிக புள்ளிகள் பெற்ற சாஸ்தா அணிக்கு அணித்திறன் கோப்பையும், அதிக புள்ளி பெற்ற மாணவர் வித்யா சங்கருக்கு ஒட்டுமொத்த தனித்திறன் கோப்பையும் வழங்கப்பட்டது. துணை முதல்வர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.

கடலூரில் நேற்று நடந்த மராத்தான் போட்டி


கடலூர் : கடலூரில் நேற்று நடந்த மராத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று கடலூரில் மராத்தான் ஓட்டப் போட்டி நடந்தது. 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 5 கி.மீ., தூரமும், 16 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு 10 கி.மீ., தூர போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 160 பேர் பங்கேற்றனர்.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அண்ணா விளையாட்டரங்கில் துவங்கி கலெக்டர் அலுவலக சாலை, பாரதி சாலை, பீச் ரோடு வழியாக தேவனாம்பட்டினம் கடற்கரைவரை சென்று, மீண்டும் பீச் ரோடு, ஜட்ஜ் பங்களா ரோடு வழியாக அண்ணா விளையாட்டரங்கை அடைந்தனர். போட்டியில் 16 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் விஸ்வநாதன், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் துரை, சிதம்பரம் அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் பிரசாந்த், மாணவிகள் பிரிவில் என்.எல்.சி., ஜவகர் பள்ளி மாணவி ஸ்ரீதேவி, கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சந்தியா, அம்சவள்ளி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

16 வயதிற்கு மேற்பட்டோர் ஆண்கள் பிரிவில் கடலூர் அடுத்த கோ.சத்திரம் மாயகிருஷ்ணன், விருத்தாசலம் விஜயமாநகரம் ராஜபாண்டியன், வெங்கடேசன், பெண்கள் பிரிவில் திட்டக்குடி வதிஷ்டபுரம் அன்புச் செல்வி, கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி ரேவதி, கடலூர் சொரக்கல்பட்டு பிரேமா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 3,000 ரூபாயும், 2ம் பரிசாக 2,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 1,000 ரூபாயும், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 500 ரூபாய் மற்றும் சான்றிதழை கூடுதல் எஸ்.பி., ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி., பாண்டியன் வழங்கினர்.

Sachin -Dinamalar.

புதுடில்லி: ""நான் "பேட்' செய்ய களமிறங்கும் போதெல்லாம், இந்திய தேசமே என்னோடு சேர்ந்து வருவதாக வர்ணிப்பதுண்டு. சர்ச்சைக்குரிய போர்ட் எலிசபெத் போட்டியின் போது எனது கையில் "பேட்' இல்லை. ஆனாலும், எனது நேர்மை மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்தனர். அதை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து போனேன். இதனை, இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது,'' என, சச்சின் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001ல் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி, போர்ட் எலிசபெத்தில் நடந்தது. இப்போட்டியின் போது இந்திய வீரர் சச்சின், பந்தில் இருந்த புற்களை சுத்தம் செய்தார். ஆனால், இவர் பந்தை சேதப்படுத்தியதாக அநியாயமாக குற்றம்சாட்டப்பட்டது. இதனை <உறுதி செய்த "மேட்ச் ரெப்ரி' மைக் டென்னஸ், சச்சினுக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதித்தார். இதையடுத்து இந்திய ரசிகர்கள் கொதிப்படைந்தனர். நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இச்சம்பவம் உட்பட தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, பத்திரிகையாளர் கவுதம் பட்டாச்சார்யா எழுதியுள்ள "சச்' என்ற புத்தகத்தில் சச்சின் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளதாவது:
போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் போது பந்தில் ஒட்டியிருந்த புற்களை தான் அகற்றினேன். ஒருபோதும் பந்தின் தையலை பிரிக்கவோ அல்லது சேதப்படுத்தவோ முயற்சிக்கவில்லை. இது பற்றிய உண்மையை மைக் டென்னசிடம் எடுத்துக் கூறினேன். ஆனால், எதையும் கேட்க அவர் தயாராக இல்லை. இறுதியில் என் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டிய போது அதிர்ந்து போனேன்.
மக்கள் ஆதரவு:
இந்த நேரத்தில் நாட்டு மக்கள் எனது நேர்மை மீது நம்பிக்கை வைத்தனர். எனக்கு முழு ஆதரவு அளித்தனர். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நான் "பேட்' செய்ய களமிறங்கும் போதெல்லாம், இந்திய தேசமே என்னோடு சேர்ந்து வருவதாக வர்ணிப்பதுண்டு. போர்ட் எலிசபெத் போட்டியின் போது எனது கையில் "பேட்' இல்லை. ஆனாலும், ரசிகர்கள் முழு ஆதரவு அளித்தனர். அதை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து போனேன். இதனை இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது. இந்த சம்பவத்துக்கு பின் பந்தை சுத்தம் செய்யும் போது, அம்பயர் அருகில் இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.
சூதாட்ட சர்ச்சை:
கடந்த காலத்தில் இந்திய கிரிக்கெட்டை சூதாட்ட சர்ச்சை உலுக்கிய போது, நான் கலங்கவில்லை. எனது கடமையில் மட்டும் கண்ணும்கருத்துமாக இருந்தேன். அந்த நேரத்தில் வருமான வரியை நேர்மையாக செலுத்தியதற்காக எனக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. அது மிகுந்த நிம்மதியை தந்தது. இதனை பார்க்க எனது தந்தை இல்லையே என்ற ஏக்கம் மட்டும் மனதில் இருந்தது.
மும்பை தாக்குதல்:
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், மிகுந்த மனவேதனை அளித்தது. அப்போது கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம். இரவில் தான் தாக்குதல் பற்றி தெரிய வந்தது. வீட்டில் உள்ளவர்களும் நெருக்கமானவர்களும் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை போன் மூலம் தெரிந்து கொண்டோம். அந்த பயங்கரத்தை தாங்கிக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. சகஜ நிலைக்கு திரும்ப நீண்ட காலம் தேவைப்பட்டது.
இவ்வாறு சச்சின் கூறியுள்ளார்.

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/