பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அளவிலான ஆணழகன் போட்டி மற்றும் பெஞ்ச் பிரஸ் போட்டி ரோஷினி ஜிம்மில் நடந்தது. போட்டியில் ரோஷினி ஜிம் வீரர் மேசாக் மிஸ்டர் பெஞ்ச் 2011 மற்றும் மிஸ்டர் ரோஷினி கிளாஸிக் 2011 ஆகிய பட்டங்களை வென்றார். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகளை பட்டுக்கோட்டை நகர போலீஸ் ஸ்டேஸன் எஸ்.ஐ., சுகுமாரன், வக்கீல் இளங்கோவன் மற்றும் ரோஷினி ஜிம் பயிற்சியாளரும் இந்திய இரும்பு மனிதன் பட்டம் வென்றவருமான சர்வதேச வலுதூக்கும் வீரர் நாடிமுத்து ஆகியோர் வழங்கினர். இந்த போட்டிக்கு நடுவராக சென்னையை சேர்ந்த இந்திய ஆணழகன் சங்க நடுவர் அமீர்பாஷா பணியாற்றினார். ஆணழகன் போட்டியில் 50 கிலோ எடைபிரிவில் பாலாஜி, மணிமாறன், 55 கிலோ எடை பிரிவில் மேசாக், பிரகாஷ், ரமேஷ், 60 கிலோ எடைப்பிரிவில் சதீஷ், பயாஸ் அஹமது, அக்பர் ஆகியோரும், 65 எடை பிரிவில் முகமது அலிஜின்னா, செபஸ்டின், பழனிச்சாமி ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.
பெஞ்ச் பிரஸ் போட்டியில் 56 கிலோ எடை பிரிவில் ஸ்ரீதரன், அப்துல் அஜிஸ், 60 கிலோ எடை பிரிவில் மேசாக், அப்துல் பூட்டோ, 67 கிலோ எடை பிரிவில் முருகானந்தம், சுகுனேஷ்வரன், ஏனாதி மதன்ஆகியோரும், 75 கிலோ எடை பிரிவில் செந்தில்குமார், முகமது அலிஜின்னா, சீனிவாசன் மற்றும் 75 கிலோவுக்கு கூடுதல் எடை பிரிவில் கவின்சான்ட்ரோன், மதியழகன், அரவிந்தன் ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர். முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment