Tuesday, February 8, 2011

: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி-Dinamalar

கோவை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை, கோவையில், பார்வையாளர்களிடம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், வரும் 19ம் தேதி துவங்குகிறது. கோப்பையை, பொதுமக்களிடையே அறிமுகப்படுத்தும் வகையில், இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது; இதில், கோவையும் ஒன்று. கோவை மக்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, ரிலையன்ஸ் சார்பில், கோவை ரெசிடென்சி ஓட்டலில், நேற்று நடந்தது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தமிழ்நாடு, கேரள மாநில மையத்தின் தலைவர் ராகேஷ் சிங், கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம், மரியாதை நிமித்தமாக வழங்கினர். சினிமா பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் இசையமைத்துப் பாடிய, போட்டிகளின் மைய நோக்கப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. கோவை காந்திபுரம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளுக்கு, திறந்த வாகனத்தில் உலகக்கோப்பை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ரிலையன்ஸ் நிர்வாகிகள், மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/