திண்டிவனம் : திண்டிவனத்தில் நடக்கும் தென் மண்டல பூப்பந்தாட்ட போட்டியில் முதல் சுற்றில் தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தென்மண்டல பூப்பந்தாட்ட போட்டிகள் நேற்று முன் தினம் துவங்கின. போட்டிகளுக்கு ஐதராபாத் தாண்டவ கிருஷ்ணன் தலைமையில் தமிழ்நாடு ரகுபதி, சுப்ரமணியன், சச்சிதானந்தம், கர்நாடகா நாகபூஷணம், ஆந்திரா முரளி கிருஷ்ணன், ஐதராபாத் கவுரி சங்கர் நடுவர்களாக செயல்படுகின்றனர். முதல் சுற்று போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வெற்றி பெற்றன.
ஆண்கள் பிரிவில் கேரள அணியை தமிழக அணி வென்றது. மேலும் ஐதராபாத் அணி புதுச்சேரியையும், கர்நாடகா அணி கேரள அணியையும், ஆந்திரா அணி புதுச்சேரி அணியையும் வென்றன.மகளிர் பிரிவில் தமிழக அணி ஐதராபாத் அணியை தோற்கடித்தது. மேலும் கர்நாடகா அணி புதுச்சேரியையும், ஆந்திரா அணி கேரளாவையும், கேரளா அணி புதுச்சேரியையும் தோற்கடித்தன .இறுதியாக நடந்த போட்டியில் கர்நாடகா அணியிடம் தமிழக அணி போராடி தோற்றது. தொடர்ந்து இரவு போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டிகள் 24ம் தேதி வரை நடக்கிறது.
No comments:
Post a Comment