Monday, October 25, 2010

Chidambaram sports.

சிதம்பரம் : மண்டல அளவிலான பூப்பந்து போட்டிக்கு சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந் தது. இப்போட்டியில் பங்கேற்ற சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சுந்தர், விஷ்ணு, கோபாலகிருஷ்ணன், சுதர்சன், தவசீலன், அஜய், சுவாமிநாதன் ஆகியோர் பெரியவர் பிரிவில் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்  சீனிவாசன், வெங்கடேஷ் ஆகியோரை பள்ளி நிர்வாகி பாலசுப்ரமணியன் பாராட்டினார்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/