Sunday, October 17, 2010

Chess at Mannargudi

மன்னார்குடி: மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் சர்வதேச ரோட்டரி இளைஞர் சேவை மாதத்தை முன்னிட்டு மன்னார்குடி சேவியர்ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில் இளைஞருக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கபிஸ்தலம் ஜாகிர்உசேன் முதல் பரிசு, பட்டுக்கோட்டை கட்டையன்காடு கரத்கல்யாண் இரண்டாம் பரிசு, திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியார் பள்ளி மாணவன் அருண்பிரசாத், மூன்றாம் பரிசு, தஞ்சாவூர் பெரியார் பாலிடெக்னிக் மாணவர் பாலுகார்த்திக் நான்காம் பரிசு, தேவாதிராஜன் ஐந்தாம் பரிசும் பெற்றனர். கபிஸ்தலம் பழனியாண்டி, திருத்துறைப்பூண்டி துர்காபிரபு, மன்னார்குடி தரணி மெட்ரிக்பள்ளி அபிராமி, மன்னார்குடி வெண்பாபிரபு, ஆசிரியை பூங்குழலி, உள்ளிக்கோட்டை விசாகர் ஆகியோர் ஆறு முதல் 16 பரிசுகள் வரை பெற்றனர்.

மாலை நடந்த பரிசளிப்பு விழாவுக்கு மிட்டவுன் ரோட்டரி சங்க சாசன தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு சதுரங்க கழக இணை செயலாளர் பாலகுணசேகரன் முன்னிலை வகித்தார். மன்னார்குடி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, கேடயம் வழங்கினர். மிட்டவுன் ரோட்டரி நிர்வாகிகள் நடராஜன் குணசேகரன், இருளப்பன் ஆகியோர் பேசினர்

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/