Sunday, October 31, 2010

ஈரோடு விளையாட்டு போட்டிகள்

ஈரோடு: ஈரோடு வேளாளர் இன்ஜினியரிங் கல்லூரி அணி பல்கலை அளவிலான போட்டியில் பல பரிசுகள் பெற்றுள்ளது.ஈரோடு மண்டல அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இக்கல்லூரி அணி தங்கப்பதக்கமும், சிறந்த உடல் கட்டமைப்பு போட்டியில் மாணவர் ராகுல் தங்கப்பதக்கமும், பளு தூக்கும் போட்டியில் மாணவி கிரித்திகா வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.ஆண்கள் கால்பந்து மற்றும் டேபிள் டென்னிஸில் வெள்ளிப்பதக்கம், ஆண்கள் கிரிக்கெட், பெண்கள் டேபிள் டென்னிஸ் மற்றும் பூப்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றது.

தடகளப் போட்டியில் சிந்து பைரவி 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம், 5,000 மீட்டர் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். மாணவி கிருத்திகா உயரம் தாண்டுதலில் வெண்கலம், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தவமணி பிரகாஷ் வெண்கலம், மாணவி மைதிலி உயரம் தாண்டுதலில் வெள்ளி, 100 மீட்டர் தடையோட்டத்தில் வெண்கலம், மராத்தான் போட்டியில் அபிராமி வெண்கலம் பெற்றனர். மாணவ, மாணவியரை தாளாளர் சந்திரசேகர், முதல்வர் ராமமூர்த்தி, பேராசிரியர் ஜெயச்சந்தர், நிர்வாக மேலாளர் பெரியசாமி ஆகியோர் பாராட்டினர்.

* ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றிபெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் எஸ்.எஸ்.எல்.ஸி.,  மாணவர் யுகேந்திரா, எட்டாம் வகுப்பு மாணவர் சாஹித்யா ஆகியோர் தனிநபர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் முதலிடம் பெற்றனர். செஸ் போட்டியில் எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவி சரண்யா, எட்டாம் வகுப்பு மாணவி பார்கவி ஆகியோர் முதலிடம் பெற்ற

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/