Sunday, October 17, 2010

Virudhunagar sports

விருதுநகர்: அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் முதலிடம் பெற்றனர்.விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தது. 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நித்தின், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில், சாத்தூர் எஸ்.எச்.என். எட்வர்டு பள்ளி மாணவர் கபிலன், 19 வயதிற்குட்பட்டோர் போட்டியில் மலைப்பட்டி அரசு பள்ளி மாணவர் ரமேஷ்குமார், மற்றொரு அரசு பள்ளி மாணவர் செல்வம் ஆகியோர் முதலிடம் பெற்றனர். மல்லாங்கிணர் எம்.எஸ்.பி.என்., மேல்நிலைப்பள்ளியினர் ஏற்பாடு செய்தனர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/