கோவை : பாரதியார் பல்கலை கிரிக்கெட் போட்டியில் சேரன், நந்தா கலை அறிவியல் கல்லூரிகள் வெற்றி பெற்றன.பாரதியார் பல்கலை அனைத்து மண்டலங்களுக்கான கிரிக்கெட் போட்டி பாரதியார் பல்கலையில் நடந்து வருகிறது. "ஏ, பி, சி, டி' மண்டலங்களை சேர்ந்த எட்டு கல்லூரிகள் "நாக்அவுட்-லீக்' முறை போட்டியில் பங்கேற்றன.
முதல் போட்டியில், சேரன் கலை அறிவியல் கல்லூரி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்ரீநேரு மகாவித்யாலயா கலை அறிவியல் கல்லூரியை வென்றது.
இரண்டாவது போட்டியில், நந்தாகலை அறிவியல் கல்லூரி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பொள்ளாச்சி என்.ஜி.எம்., கலை அறிவியல் கல்லூரியை வென்றது.மூன்றாவது போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாரதியார் பல்கலை அணியை வென்றது. நான்காவது போட்டியில், எஸ்.என்.ஆர்.,கலை அறிவியல் கல்லூரி 72 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அரசு கலை கல்லூரியை வென்றது.சேரன் கலை அறிவியல் கல்லூரி, நந்தா கலை அறிவியல் கல்லூரி, எஸ்.என்.ஆர்., கலை அறிவியல் கல்லூரி, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி ஆகியன லீக் முறையில் விளையாட தகுதி பெற்றன.
Subscribe to:
Post Comments (Atom)
https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/
-
http://youtu.be/bNZh4X9llWo-hear only audio.129 minutes -01 07 12.
-
videos 1 http://youtu.be/31FDOHhRyuQ -3 mts http://youtu.be/TjzxgVW6jQ8 -4 mts http://youtu.be/3ESiQea-wdQ -3 mts http://youtu....
No comments:
Post a Comment