Saturday, October 16, 2010

Trichy cricket

திருச்சி: திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க லீக் போட்டியில் விளையாடும் இரண்டு அணியை தேர்வு செய்வதற்கான நாக்அவுட் போட்டிகள் அக்டோபர் 24ம் தேதி துவங்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக கிரிக்கெட் சங்கத்துடன் இணைக்கப்பட்ட திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஆண்டுதோறும் 50 அணிகளுக்கான லீக் போட்டிகளை நடத்துகிறது. 2010-11ம் ஆண்டுக்கான லீக் போட்டியில் ஐந்தாவது டிவிசனில் சேர்த்துக் கொள்ளவுள்ள இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்கான நாக்அவுட் போட்டிகள் வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படுகிறது. நாக்அவுட் போட்டியில் பங்கு பெற விரும்பும் அணிகள் தங்களின் பெயரை திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர்கள் ராமச்சந்திரனை 98421-29727, கிரிதரனை 94433-76978 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆலோசனைக்கூட்டம்: திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம், தமிழக கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து நடத்தும் லீக் போட்டிகள் வரும் நவம்பர் முதல்வாரத்தில் நடத்தப்படுகிறது. போட்டியின் விதிமுறைகள் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கிரிக்கெட் அணி செயலாளர்கள், அணித்தலைவர்கள், பள்ளிகள், கல்லூரிகள், அம்பயர்கள் கூட்டம் வரும் 19ம் தேதி இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது என்று திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/