Tuesday, October 26, 2010

Gummidipondo-school sports.

கும்மிடிப்பூண்டி:ஆர்.எம்.கே., உறைவிடப் பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சென்னை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எஸ்.எம்., நகரில் ஆர்.எம்.கே., உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், கடந்த நான்கு நாட்களாக நடந்தன.

முகப்பேர், பெரம்பூர், ஆவடி, அம்பத்தூர், சேத்துப்பட்டு, அண்ணா நகர், குரோம்பேட்டை, தாம்பரம், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளை சேர்ந்த பள்ளிகள் மற்றும் திருச்சி, கரூர் என ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.கிரிக்கெட், வாலிபால், த்ரோபால், நீச்சல் ஆகிய நான்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழா நேற்று பள்ளி அரங்கத்தில் நடந்தது.

விழாவில், சிறப்பு விருந்தினராக லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் சுனில்குமார்.ஐ.ஏ.எஸ்., கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இவ்விழாவுக்கு, ஆர்.எம்.கே., கல்வி குழுமத்தின் செயலர் எலமஞ்சி பிரதீப் முன்னிலை வகித்தார்.ஆர்.எம்.கே., பள்ளிகள் குழுமத் தலைமை முதல்வர் சதீஷ், அனைவரையும் வரவேற்றுப் பேசியபோது, "அடுத்தாண்டு நடக்கவிருக்கும் விளையாட்டுப் போட்டிகளின் போது கூடைப்பந்து மற்றும் கால்பந்து ஆகிய போட்டிகளும் இடம் பெறும்' என்றார். பள்ளி முதல்வர் ஜமுனாராணி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/