Friday, November 5, 2010

நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 1,000 ரூபாய்

கோவை: நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கவிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை கலெக்டர் உமாநாத் அறிக்கை: விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்ற நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை, 1,000 ரூபாய் வீதம் மாதந்தோறும் வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தில் வாழும் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாத வருமானம் 2,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். கடந்த ஏப்.1ல் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்ச விளையாட்டுத் தகுதிகளாக, தேசிய விளையாட்டுக்கழகங்கள் நடத்திய தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் பெற்றிருக்க வேண்டும். மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்திய மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை, கோவை நேரு விளையாட்டரங்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை வரும் டிச.31ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலரின் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/