Wednesday, November 10, 2010

அன்னூர் கூடைப்பந்து-Dinamalar.

அன்னூர்:  அன்னூர் கூடைப்பந்து அணி மாவட்ட அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றது.  "மே பிளவர்' கூடைப்பந்து கழகம் சார்பில் கோவை ராஜலட்சுமி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடந் தது. அன்னூர் உள்பட 16 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் அணிகள் பங்கேற்று விளையாடின.  இதில் ராஜலட்சுமி மில் "ஏ' அணி, அன்னூர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளி அணி, ஒண்டி புதூர் கதிரி மில்ஸ் அணி, கோவை, சர்வஜன மேல்நிலைப்பள்ளி அணி ஆகியவை முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களை வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் இரண் டாம் இடம் வென்ற அன்னூர் அணியின் தலைவர் ஜீவானந்தம் மற்றும் வீரர்களுக்கு, அன்னூர் கூடைப்பந்து கழக செயலாளர் கார்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியர், பெற் றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/