Friday, November 5, 2010

அகில இந்திய கபடி போட்டி-Dinamalar 04 11 10

கடலூர்:அகில இந்திய கபடி போட்டிக்கு கடலூர் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள அகில இந்திய சிறுவர், சிறுமியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தமிழக சிறுமியர் கபடி அணிக்கு கடலூர் ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தேன்மொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கான கடிதத்தை மாணவி தேன்மொழியிடம் தமிழ்நாடு மாநில கபடி கழகத் துணைத் தலைவர் வேலவன்வழங்கினார்.மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பூங்கொடி, பயிற்சியாளர்கள் நடராஜன், புஷ்பராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/