Tuesday, November 2, 2010

கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

கடலூர்  : கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கடலூர் அயன்மேன் ஹைடெக் ஜிம் சார்பில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி டவுன் ஹாலில் நடந்தது. 55 கிலோ 65, 70, 75, 75 பிளஸ் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட ஆறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப் பட்டது. இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார். போஸ், சீனுவாசராகவன், அமீர்பாஷா, சுகுமார் நடுவர்களாக இருந்தனர். பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் மாநில கபடி சங்கத் தலைவர் வேலவன் தலைமை தாங்கினார். பொறியாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கராத்தே ஆறுமுகம் வரவேற்றார். புதுச்சேரி மாநில சபாநாயகர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக கணேஷ் சாம் பின் பட்டமும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முத் துக்குமரன் முதலிடமும் பெற்றனர். மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், அமெச்சூர் ஆணழகன் சங்க செயலாளர் பாபு, யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/