Thursday, November 18, 2010

மாநில அளவிலான கராத்தே போட்டி-Dinamalar 18 11 10

கடலூர் : மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் கடலூர் சி.கே.பள்ளி மாணவர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர். சென்னை அசோக் நகரில் மாநில அளவிலான இஷின்ரியூ கராத்தே போட்டி நடந்தது. அதில் கடலூர் சி.கே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சென்சாய் கிருஷ்ணன் தலைமையில் பங்கேற்றனர்.
அதில் குமுத்தே பிரிவில் ருத்ரராம் சங்கர் முதலிடத்திலும், திவ்யதர்ஷினி, ராஜராஜன் 2ம் இடத்திலும், கத்தா பிரிவில் பிரித்திவி, நிஷா, பிரிவின், அஜித், கி÷ஷார், முகமது மரைக்காயர் முதலிடத்திலும், கிருஷ்ணராஜ், தீபாஸ்ரீ, ஸ்ரீதர் ரிஷிநாத் ஆகியோர் 2ம் இடத்தையும், பிரித்தி, இமான் வேல், ஹரிஹரன், பிரதாப், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பதக்கங்களை வென்றனர். மாநில கராத்தே போட் டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் சென்சாய் கிருஷ்ணன் ஆகியோரை பள்ளியின் இயக்குனர் சந்திரசேகரன், முதல்வர் தார்ஷியஸ் பாராட்டி, பரிசு வழங்கினர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/