Tuesday, November 9, 2010

செஸ் விளையாட்டில் முத்திரை

புதுச்சேரி :  கேந்திரிய வித்யாலயா மாணவி செஸ் விளையாட்டில் முத்திரை பதித்து வருகிறார். புதுச்சேரி பல்கலைக்கழக கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 படிக்கும் மாணவி பிரியங்கா, தேசிய அளவிலான 19 வயதிற்குட்பட்ட  சதுரங்க போட்டிகளில் பங்கேற்று பல பதங்கங்களை குவித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் புனேவில், தேசிய அளவிலான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையே நடந்த சதுரங்கப் போட்டியில் சென்னை மண்டலத்தின் சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். விளையாட்டில் மட்டுமின்றி படிப்பிலும் அசத்தும் இந்த சதுரங்க ராணி, சதுரங்கம் விளையாடப் போகும் முன் கணினியில் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது தந்தை டாக்டர் கணேசன், இந்திராகாந்தி திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் மண்டல இயக்குனராக பணிபுரிகிறார். இவரது தாயார் உமாமகேஸ்வரி பி.இ., பட்டதாரி. எதிர் காலத்தில் இஸ்ரோ விஞ்ஞானியாக @வண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் பிரியங்கா கூறியதாவது: பல விளையாட்டுகளில் பதக்கம் வென்றுள்ளேன். இருந்தாலும் சதுரங்கம் மீதுதான் எனக்கு அதிக விருப்பம். கோழிக்கோடு, மும்பை, டில்லி, போபால், கோவா ஆகிய நகரங்களில் நடந்த சதுரங்கப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளேன். சிறு வயதில் தாயாருடன் விளையாடியது எனக்கு சிறந்த பயிற்சியாக அமைந்தது. படிப்பு, விளையாட்டு என இரண்டு குதிரையிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளேன்.  சர்வதேச அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்பது எனது குறிக்கோள். எதிர் காலத்தில் இஸ்ரோ விஞ்ஞானியாக @வண்டும் என்பது எனது லட்சியம். இவ்வாறு பிரியங்கா கூறினார்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/