Saturday, November 20, 2010

மாநில அளவிலான கால்பந்து போட்டி-Dina malar.

திருச்சி: திருச்சியில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் திருச்சி விளையாட்டு விடுதி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்ல விளையாட்டு விடுதி மற்றும் பள்ளிகளுக்கிடையேயான மாநில அளவிலான கால்பந்து போட்டி திருச்சியில் இரண்டு நாட்களாக நடந்தது. சூப்பர் சீனியர் மற்றும் சீனியர் என இரண்டு பிரிவுகளாக நடந்த இப்போட்டியில் சென்னை விளையாட்டுப் பள்ளி, திருச்சி விளையாட்டு விடுதி, நெய்வேலி விளையாட்டுப் பள்ளி, மதுரை விளையாட்டு விடுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அணிகள் பங்கேற்றன.

போட்டிகளின் இறுதி போட்டி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில், சூப்பர் சீனியர் பிரிவில் திருச்சி விளையாட்டு விடுதி அணியும், நெய்வேலி விளையாட்டு பள்ளி அணியும் மோதின. இதில் திருச்சி விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. மற்றொரு பிரிவான சீனியர் பிரிவில் மதுரை விளையாட்டு விடுதி அணியும், திருச்சி விளையாட்டு விடுதி அணியும் மோதி ன. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் மதுரை விளையா ட்டு விடுதி அணி வெற்றிபெ ற்று முதல் பரிசினை பெற்றது.

வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் நியூ பிகின்செல்லப்பா தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். மண்டல உடற்கல்வி ஆய்வாளர் ரதமணி வாழ்த்தி பேசினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு மண்டல முதுநிலை மேலாளர் நியூபிகின் செல்லப்பா பரிசு கோப்பை வழங்கினார்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/