Friday, November 5, 2010

மாநில அளவிலான கராத்தே போட்டி

கடலூர் : மாநில அளவிலான கராத்தே போட்டியில் கடலூர் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். மாநில அளவிலான இஷின்ரியூ கராத்தே போட்டி சென்னையில் நடந்தது. கடலூர் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர். அதில் பிளாக் பெல்ட் குமுத்தே பிரிவில் மாணவர்கள் பிரபஞ்ச வேதாந்தன் இரண்டாமிடமும், யாசர் அராபத் மூன்றாமிடமும் பெற்றனர். கலர் பெல்ட் பிரிவில் பாலசந்தர் முதலிடத்தையும், சரவணகுமார் இரண்டாமிடத்தையும், விக்னேஷ் மூன்றாமிடமும் பெற்றனர். கலர் பெல்ட் கத்தா பிரிவில் சிபி, பாலச்சந்தர் முதலிடத்தையும், ஜானகிராமன், விக்னேஷ் மூன்றாமிடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் சென்சாய் கிருஷ் ணன் ஆகியோரை பள்ளியின் தாளாளர் மாவீர்மல் சோர்டியா, தலைமை ஆசிரியர் சிவானந்தம் பாராட்டினர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/