Friday, November 5, 2010

மாநில அளவிலான கோ கோ போட்டி

கடலூர் : சென்னையில்  நடந்த மாநில அளவிலான கோ கோ போட்டியில் கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி அணி வெற்றி பெற்றது.சென்னை குருநானக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அள விலான கோ கோ போட்டி நடந்தது.  மாநிலத்தின் பல் வேறு பள்ளிகளைச் சேர்ந்த 20 அணிகள் பங் கேற்றன. கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் மற்றும் சுழற் கோப்பையை வென்றனர்.அதேப்போன்று வேலூர் கிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர்கள் தேவகுமார், செல்வராஜ் ஆகியோரை  பாராட்டி பள்ளியின் முதல்வர் ஆக்னல் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரமோகன், கிளமென்ட், சின்னப்பராஜ், புஷ்பராஜ் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/