Thursday, February 26, 2015

* ஸ்ரார்த்தம் நடக்கும் போதும், சமையல் செய்யும் போதும்,




Krishnan Iyer shared Vasthu Pandit's post to the group:Tanjore Brahmins.
4 hrs ·

சில குறிப்புகள்
* ஸ்ரார்த்தம் நடக்கும் போதும், சமையல் செய்யும் போதும், யாரும் [ சாப்பிட வரும் பிராம்ஹணாள் உட்பட] அதிகப் பேச்சுக்களோ, வம்பு, அரசியல் போன்ற விவாதங்களில் ஈடுபடுவதோ கூடாது. சங்கீதம், பக்தி கேசட்டுகளைக் கூட ஓட விடக்கூடாது. இவற்றையெல்லாம் கேட்டால் பித்ருக்கள் திரும்பி போய்விடுவார்களாம்.
* வீட்டில் சமையல் செய்து ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். கர்த்தாவின் தர்மபத்தினி சமையல் செய்து உத்தமம். ஸ்ரார்த்த முதல் நாள் எந்த பட்க்ஷண்மும் தயார் செய்து வைத்து, ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக்
கூடாது.
* சிலர் சமாராதனை சாப்பாடாக, தேங்காய் முதலியவைகளை சேர்த்து செய்வார்கள். இதுவும் சரிதான். ஏனெனில் சாப்பிடுபவர்கள் திருப்தியாக சாப்பிட இதில் வாய்ப்பு அதிகம். திருப்தியாக ப்ராம்ஹணர்க்ள
சாப்பிட வேண்டுமென்பது மிக முக்கியம் அல்லவா? எங்காத்து வழக்கம் என்று முரண் பிடிக்காமல் சமையல் ருசியாக சமாராதனை ரூபத்தில் சமைத்தால் தவறில்லை. அதற்காக ஸ்ரார்த்ததில் விலக்கப்
படவேண்டிய காய்கறிகளையும், பொருட்களையும் விலக்காமல் இருக்கக் கூடாது. மொத்தத்தில் சமையல் நங்கு சாப்பிடும்படியாகவும் இருக்க வேண்டும். அவரவர்கள் இல்லத்து பெரியோர்களின்
ஒப்புதலோடு சமாராதனை சாப்பாடு ஏற்புபுடையதே என்பது அடியேனுடைய கருத்து.
* சமைக்கும் மற்றும் பரிமாறும் ஸ்த்ரீகள் மிகவும் மடியாகவும், மடிசார் புடவையுடன் தான் இருக்க வேண்டும். தூய்மையிலாத பந்துக்கள் ஸ்ராத்த இடத்தில் இருக்கக் கூடாது.
* சமையல் செய்து எல்லாம் ஆறி அலர்ந்து போயிருக்கக் கூடாது. சுடச்சுட ருசியாக சாப்பிடும்படி பரிமாறுவது அவசியம். தான் சந்தோஷமிக்கவனாக, ஸ்ரார்த்த ப்ராஹ்மணாளை சநோஷப்படுத்தயவாறே மெதுமெதுவாக அவர்கள் சாப்பிடுமாறு பரிமாறுவது முக்கியம். பதார்த்தங்களை அவர்கள் சமீபம்
கொண்டு சென்று இந்த அத்ருஸம் ருசியாக செய்யப்பட்டுள்ளது…..இந்த வடை சூடாக உள்ளது…..இன்னுமொன்று போட்டுக்கோங்கோ ….என்று பவ்யமாகக் கேட்டு திருப்தியாக சாப்பிடும்படி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். [அதற்காக அவர்கள் வேண்டாம் என்ற சைகை காட்டியபோதும், அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களை ச்ரமப்படுத்தக் கூடாது].
* சமையலில் கோதுமை, உளுந்து, பயறு, எண்ணையில் செய்யப்பட்ட பதார்த்தங்கள், இவைகளை கட்டாயம் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்க்க வேண்டும்.
* கர்த்தா, சகோதரர்கள், பெண், புத்திர பௌத்திரர்கள், தௌஹித்திரர்கள், ஸபிண்ட ஞாதிகள், பித்ரு சேஷம் சாப்பிடலாம். ஒருவன் தனது மாமனார், மாமா இவர்களுடைய பித்ரு சேஷம் சாப்பிடலாம்.
* ஸந்தியாவந்தனம் தொடர்ந்து செய்யாதவர்கள் ஸ்ரார்த்த நாள் அன்றாவது த்ரிகால ஸந்தியாவந்தனம் செய்துதான் ஆக வேண்டும்.
* சமையல் ருசியாக உள்ளதா என்று கர்த்தா சாப்பிடும் ப்ராஹ்மணர்களை வாய் தவறியும் கேட்கக் கூடாது.
* கருப்பு எள் சாதத்தில் மிகவும் அவசியமான ஒன்று ராக்ஷஸர்களை விரட்டி பித்ருக்களுக்கு திருப்திதரக் கூடியது [ எள்ளை ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து எடிக்கக் கூடாது].
* பழத்தைத் தவிர பற்றதை வெறும் கையால் பரிமாறக் கூடாது. உப்பை தனியாக பரிமாறக் கூடாது. ஸ்ராத்ததன்று காலையில் ஸ்ரார்த்தம் முடியும் வரயில் எதுவும் சாப்பிடக் கூடாது.
* அன்று மத்தியானம் போஜனமானபின் இரவில் சாப்பிடும் பழக்கம் தவறு. மிக அவசியமெனில், திரவாக சிறிது இரவு உட்கொள்ளலாம். உடல் நலம் குன்றியவர்களுக்கும் இது பொருந்தும்.
* மாத்யாஹ்னிகம் செய்து பிறகு, ஸ்ரார்த்த கர்மா ஆரம்பிக்கலாம். க்ருஸரம் கொடிப்பதாக இருந்தால், சிராத்தாங்க ஸ்நானத்தை [2-வது ஸ்நானம்] பிறகு தான் செய்ய வேண்டும். அன்று காலை நனைத்து
உலர்த்திய மடி வஸ்த்ரத்தைதான் உடுத்த வேண்டும். ஸ்ரார்த்ததில் மடி மிக முக்கியம்.
* அபிச்ரவணம் சொல்பவர் கிடைகாவிட்டால், தானே இதிகாச புராணங்கள் படனமோ, ஸ்லோகங்களையோ, சூக்தாதிகளையோ, ப்ராம்ஹணாள் சாப்பிடும்போது சொல்லலாம்.
* ஸ்ரார்த்த நாளன்று கோபமும், அவசரமும் கூடாது. மணி ஓசை, கோலம் முதலுயவை கூடாது.
* ஸ்ரார்த்தம் ஆரம்பித்து, தான் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரயில் கர்த்தா, அப்ராம்ஹணர்களுடன் பேசுவதையோ, பார்ப்பதையோ தவிர்க்கவும்.
* இரும்புப் பாத்திரத்தை ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.
* கடி சூத்ரம், மிக உசத்தியானது. மகிமை வாய்ந்தது. அதை நாம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். குறைந்தது ஸ்ரார்த்த கர்மா அன்றாவது கட்டிக் கொள்வது அவசியம். அவ்வாறே பஞ்சகச்சமும்.
* தினசரி செய்யும் ஆத்து பூஜையை ஸ்ரார்த்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும்.
* ஸ்ரார்த்தத்தை நம் விருப்பத்திற்குத் தள்ளிப் போடக் கூடாது. ஒரு வேளை தீட்டு, ஞாபக மறதி போன்ற காரணங்களினால் உரிய தேதியில் செய்ய முடியாமல் போய்விட்டால், அன்று உபவாசமிருந்து
மறுநாள் ஸ்ரார்த்தம் செய்யலாம்.
* கர்த்தா ஸ்ரார்த்தத்தையே மறந்துவிட்டு இருந்தால், அவருக்கு ஞாபகம் வந்தவுடன் அடுத்து வரக்கூடிய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி, ஏகாதசி, அம்மாவாசை, இதில் ஏதாவது ஒரு திதியில் செய்ய
வேண்டும். ப்ராஜாபத்ய க்ருச்ரம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.
* ஒருவேளை ஸ்ரார்த்தம் செய்பவருக்கு உடல் நலம் குன்றியோ, அல்லது தள்ளாமையோ வந்தால், பிறரை விட்டு [ மகனாக இருந்தாலும் தோஷமில்லை] ஹோமம் செய்து ஸ்ரார்த்தத்தை நடத்தலாம்.
கயா ஸ்ரார்த்தமும், ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தமும்
சமீப காலமாக ஒரு கருத்து ஆங்காங்கு நிலவி வருகிறது. கயாவில் ஒரு தடவை ஸ்ரார்த்தம் செய்து விட்டால் வருஷா வருஷம் இனி ஸ்ரார்த்தம் செய்யத் தேவையில்லை என்பதே அது. இது சுத்த அபத்தம்.
சாஸ்த்திர விரோதமானது.
ஒரு சிறு உதாரணத்தின் மூலமாக இதை புரிந்து கொள்ள முரற்சி செய்வோம். ஒரு நாள் பிரமாதமான மிக ருசியான உயர்ந்தவிலையில் பலவகைகளுடன் மிகவும் காஸ்ட்லியான விருந்து [பெரிய நக்ஷத்ர
ஓட்டலாகவும் அது இருக்கலாம்] சாப்பிட்டு விட்டால், மறுநாள் நாம் சாப்பிடாமல் இருந்து விடுகிறோமா? கயா ஸ்ரார்த்தம் மிக உன்னதமானது. ஜன்மாவில் ஒரு தடவையாவது கயா ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கும் வருஷாவருஷம் செய்யும் ப்ரத்யாப்திக ஸ்ரார்த்ததிற்கும் சம்பந்தம் கிடையாது. இது வேறு. அது வேறு.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/