Thursday, November 8, 2012

வீட்டை சுற்றிலும் சுத்தம் செய்தால் டெங்கு வராது



வீட்டை சுற்றிலும் சுத்தம் செய்தால் டெங்கு வராது

  பரங்கிப்பேட்டை:டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்தது.
பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். சப் கலெக்டர் சுப்ரமணியன், பேரூராட்சிகளின் துணை இயக்குனர் பரமகுரு முன்னிலை
வகித்தனர். செயல் அலுவலர் கலைபாண்டியன் வரவேற்றார்.கலெக்டர் ராஜேந்திர ரத்னு பங்கேற்று பேசியதாவது: டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொசு உற்பத்திக்கு சாதகமான அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் நீர் தேங்கும் தண்ணீரை அகற்றும் பணிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 11 மணிக்கு துவங்கி 12 மணி வரை மாவட்டம் முழுவதும் இந்த பணி நடக்கும்.
பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், திருமண மண்டபங்கள், கோவில் வளாகங்கள், மாணவ, மாணவிகள் விடுதி, தனியார் கட்டடங்கள் போன்ற இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும்.ஒவ்வொருவரும் வீட்டை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்தால், டெங்கு காய்ச்சல் வராது. பரங்கிப்பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் ஓரளவு அகற்றப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் கிடக்கும் இடங்களில் தான் டெங்கு காய்ச்சல் அதிகமாக வரும்.
இவ்வாறு கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசினார்.பேரூராட்சி துணைத் தலைவர் நடராஜன், முன்னாள் துணைத்தலைவர் செழியன், கவுன்சிலர்கள் இப்ராகீம், அபிப் ரகுமான், கணேசன், சிவவடிவேலு, பாரதி, கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/