Monday, November 1, 2010

மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இடையிலான செஸ் போட்டி

மதுரை:டால்பின் பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றனர். மாணவர்கள் ராஜிவ்காந்தி, அபினேஷ் பிரசன்னாஜீ, கோபிகிருஷ்ணன், அருண்பிரசாந்த் ஆகியோர் பங்கேற்றனர். முதலிடம் பெற்று, "அறிவானந்த பாண்டியன்' சுழற்கோப்பையை வென்றனர். மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இடையிலான செஸ் போட்டியில் 14 வயது பிரிவில் அரவிந்த் சிதம்பரம், மீனுப்ரியா முதலிடம், ஹேமப்ரியா, அகில் 2ம் இடம் பெற்றனர். 17 வயது பிரிவில் சுப்ரமணியன் 2ம் இடம், சீத்தாலட்சுமி 3ம் இடம், 19 வயது பிரிவில் மணிகண்டன், கார்த்தியாயினி முதலிடம், உமாமகேஸ்வரன் 2ம் இடம் பெற்றனர். மாணவர்கள் கார்த்தியாயினி, மணிகண்டன், காஷ்மீரில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். பள்ளித் தாளாளர் ராமனாதன், முதல்வர் பத்மா, பயிற்சியாளர் ரமணன், மாணவர்களை பாராட்டினர்.

மாநில போட்டிக்குவிண்ணப்பம்நடப்பு கல்வியாண்டில், மண்டல பள்ளிகளுக்கான புதிய விளையாட்டுகள், தடகளம் மற்றும் குழுவிளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள், அணிகள் மாநிலப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். செஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற போட்டிகள் அனைத்திற்கும் முதலிடம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாணவர் பெயர், வயது, பிறந்ததேதியுடன் பள்ளித் தலைமையாசிரியர், அணி மேலாளர் கையெழுத்துடன் அனுப்ப வேண்டும். மாநில குழு விளையாட்டுப் போட்டிகளில் 17 வயது பிரிவுக்கு ராமநாதபுரத்திலும், 19 வயது பிரிவுக்கு வேலூரிலும் போட்டிகள் நடக்கின்றன. கூடுதல் தகவல்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரியை 94880 11756ல் தொடர்பு கொள்ளலாம்.தடகளம்மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கான மண்டல தடகளப் போட்டிகள், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நவ., 22ல் நடக்கிறது. 100, 200, 400, 800, 1500 மீட்டர் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், தடைஓட்டம், குண்டு, வட்டு, ஈட்டி எறிதல், 400, 1600 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிகள் 14, 17, 19 வயதுப் பிரிவுகளின் கீழ் நடக்க உள்ளது. இத்தகவலை, மண்டல உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/