திருச்சி: திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்திலுள்ள, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரியில் பயில்வோர், பயிலாதவர்கள் நீச்சல் கெற்கொள்ள ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தகுதிவாய்ந்த நீச்சல் பயிற்றுநரால் நீச்சல் கற்றுக் கொடுக்கும் வகையில் கடந்த இரண்டாம் தேதி பயிற்சி துவங்கியது. இப்பயிற்சி முகாம் நவம்பர் 14ம் தேதி வரை நடக்கிறது.
காலை 6.30 முதல் 7.30 மணி வரை மாணவர் மற்றும் ஆண்கள், 7.30 முதல் 8.30 மணிவரை மாணவி மற்றும் பெண்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் 500 ரூபாய். எட்டு வயதுக்கு மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர் நீச்சல் குளத்தில் நேரில்வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.
உறுப்பினர் கட்டணம் செலுத்தி பயிற்சி செய்ய விரும்புவோர், ஆண்டுக்கு 3,000 ரூபாய், அரையாண்டுக்கு 1,750 ரூபாய், காலாண்டுக்கு 1,250 ரூபாய். மாதாந்திர கட்டணம் 500 ரூபாய் செலுத்தணும். விபரங்களுக்கு, அண்ணா விளையாட்டரங்க, மண்டல முதுநிலை மேலாளரை அணுகலாம். 9940341477, 9894574492 என்ற மொபைல் எண், 0431- 2420685 என்ற ஃபோன் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/
-
http://youtu.be/bNZh4X9llWo-hear only audio.129 minutes -01 07 12.
-
videos 1 http://youtu.be/31FDOHhRyuQ -3 mts http://youtu.be/TjzxgVW6jQ8 -4 mts http://youtu.be/3ESiQea-wdQ -3 mts http://youtu....
No comments:
Post a Comment