Wednesday, November 17, 2010

கடின உழைப்பு தான் வெற்றிக்கான வழி-Dina malar

கடின உழைப்பு தான் வெற்றிக்கான வழி...! டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்: விவரம் தெரிஞ்ச நாளில் இருந்தே, டேபிள் டென்னிஸ் பார்த்து வளர்ந்தவன் நான். அப்பா ஸ்ரீனிவாசராவும், சித்தப்பா முரளீதரராவும், டேபிள் டென்னிஸ், "கோச்சாக' இருந்தனர். அதனால், இயல்பாகவே எனக்கும் டேபிள் டென்னிஸ் மேல் ஆர்வம்.மற்றவர்கள் கிரிக்கெட் ஆடும் போது, நான் மட்டும் டேபிள் டென்னிஸ் விளையாடுவேன். இதைப் பார்த்து அவர்கள், முறையாக எனக்கு டேபிள் டென்னிஸ் கற்றுக் கொடுத்தனர். 11வது வயதில், 12 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாநில அளவில் சாம்பியன் ஆனேன். அது, எனக்கு பெரிய திருப்புமுனை.அந்த வெற்றி, வெறியாக மாற, தினமும் 10 மணி நேரம் பயிற்சி எடுத்தேன். நிறைய தோல்விகளை சந்தித்தேன். ஆனால், தன்னம்பிக்கையை இழக்கவில்லை. காலேஜ் கலாட்டாக்கள், அம்மாவின் சமையல், மனைவியின் அன்பான நேரங்கள் என பலவற்றை இழந்துதான், இந்த உயரத்தை அடைய முடிந்தது.என்னை திணறடித்தது, இந்தியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிகள். நாட்டின் நம்பர் ஒன் பிளேயர் என்பதால், என் மேல் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். அதனாலேயே எனக்கு, பயமும், பதற்றமும் ஏற்பட்டது. விளையாடத் துவங்கும் முன், எதையும் யோசிக்காமல் போட்டிக்கு தயாரானேன். அமைதியான மனநிலையில் விளையாடியதால், ஒரு தங்கம், இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வெல்ல முடிந்தது.இக்கட்டான பல நேரங்களில், எனக்கு நம்பிக்கை அளிப்பது அப்துல் கலாமின் சுயசரிதைதான். என் தலைசிறந்த ரோல் மாடல் அவர் தான்.எனக்கு 2004, 2008 ஒலிம்பிக் போட்டிகளில் தோல்வியே கிடைத்தது. அவை எனக்கு நல்ல பாடமாக, அனுபவமாக அமைந்தன. 2012ல், லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை, என் தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக பார்க்கிறேன்.ஒலிம்பிக் தங்கம் தான், என் பல வருட கனவு. என் மனைவி, எனக்காக செய்த தியாகத்திற்காகவாவது இதை நான் அடைந் தே தீருவேன். ஏனென்றால், வெற்றிக்கு கடின உழைப்புதான் ஒரே நியாயமான வழி என்பதை உணர்ந்தவன் நான்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/